districts

தமிழகத்தில் 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஒப்புதல் வழங்க வேண்டும் ஒன்றிய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தல்

சென்னை, ஜன.7 - தமிழகத்தில் மேலும் 6 அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று  தமிழக அரசு வலி யுறுத்தியுள்ளது. புதுடில்லியில் வெள்ளியன்று  (ஜன.6) ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர். மன்சுக் மாண்ட வியாவை மக்கள்  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்து தமிழ்நாட்டில் உள்ள மருத்துவத்துறை தொடர்பான கோரிக்கை கடிதம் வழங்கினார். அதன் விவரம் வருமாறு: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை யால் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர்  ஒப்புதலுடன் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள சட்ட முன் வடிவுக்கு குடியரசுத் தலைவரின்  ஒப்புதலைப் பெற்றுத்தர வேண்டும்.   மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை யை விரைந்து நிறுவ வேண்டும். கோயம்புத்தூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்க அனுமதி  வழங்கவேண்டும்.  புதிதாக தொடங்கப் பட்ட ஆறு மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நிறுவ வேண்டும்.  தமிழ்நாட்டில் உள்ள 30 அரசு  மருத்துவக் கல்லூரிகளில் புதிய அரசு செவிலியர் கல்லூரி நிறுவ ஒப்புதல் வழங்க வேண்டும்.  உக்ரைனில் படித்த மாணவர்கள், இந்தியாவில் மருத்துவக் கல்லூரி களில் படிப்பு தொடர வழிவகை காண வேண்டும்.  தமிழ்நாட்டிற்கு கொரோனா  தடுப்பூசி மருந்து கூடுதலாக வழங்க  வேண்டும். தமிழ்நாட்டிற்கு பதினைந் தாவது நிதி ஆணையம் 2022-23 நிதி யாண்டிற்கு ஒப்புதல் அளித்த நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும். அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக் கப்பட்டு, நிரப்பப்படாமல் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களை மாநிலத்திற்கு ஒப்படைக்க வேண்டும். தமிழ்நாட்டில் 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங் களை ஏற்படுத்த ஒப்புதல் வழங்க வேண்டும்  இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது. மருத்துவ பட்ட மேற்படிப்பு கல்வி  வரைவு ஒழுங்குமுறை விதிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்தும் ஒன்றிய அமைச்சரிடம் மாநில அரசு சார்பில் கடிதம் அளிக்கப்பட்டது. மக்கள் நல்வாழ்வுத் துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில் குமார்,தமிழ்நாடு இல்ல முதன்மை செயலாளர் ஆஷிஷ் சாட்டர்ஜி மற்றும்  உயர் அலுவலர்கள் அப்போது உடனி ருந்தனர்.

;