districts

img

கைவிடப்படும் சிறுசேரி - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டம்

சென்னை, மே. 6- சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தின் 3வது  வழித்தடத்தில் சிறுசேரியில் இருந்து  கேளம்பாக்கம் வழியாக கிளாம் பாக்கம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டம் கைவிடப்பட்டு ள்ளது. மேலும் இதற்கு மாற்று  வழியும் பரிந்துரை செய்யப்பட்டுள் ளது. சென்னையின் பொதுப் போக்கு வரத்து சேவையில் தற்போது மிக முக்கிய பங்கு வகித்து வருவது மெட்ரோ ரயில் சேவை. சென்னை யில் தற்போது முதற்கட்டத்தில் இரண்டு வழித்தடங்களில் 56 கி.மீ. தொலைவிற்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரை என இரண்டு வழித்தடங்களில் 41 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. இந்நிலையில் சென்னை மெட்ரோவில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து, சென்னையின் புறநகர் பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவை வழங்கும் வகையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் மூன்று வழித்தடங்க ளில் சுமார் 116 புள்ளி ஒரு கி.மீ. தொலைவிற்கு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதற்காக 45க்கும் மேற்பட்ட இடங்களில் உயர்மட்ட பாதைகள் சுரங்கப்பாதை மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடை பெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் வரும் 2028 ஆம் ஆண்டிற்குள் முடிக்கவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மெட்ரோ ரயில்  இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித் தடம் மூன்று சிறுசேரி முதல் கிளாம் பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பதற்கான வழி த்தடம் 5-ல் கோயம்பேடு முதல் ஆவடி வரை மெட்ரோ ரயில் நீட்டிப் பதற்கான கடந்த வருடம் தமிழக அர சிடம் சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதில் சிறுசேரி முதல் மாத வரம் பால் பண்ணை வரையிலான மூன்றாவது வழித்தடத்தை கேளம் பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரை 23.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிப்பு தோராயமாக 12 உயர்மட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் ரூ.  5458.6 கோடி மதிப்பீட்டில் அமைப்ப தற்கான சாத்தியக்கூறு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. மேலும் கலங்கரை விளக்கம் பூந்தமல்லி வரையிலான 4வது வழித் தடத்தை பரந்தூர் வரை நீட்டிக்க வும், மாதவரத்தில் இருந்து கோயம் பேடு வழியாக சோழிங்கநல்லூர் வரையிலான 5வது வழித்தடத்தை ஆவடி வரை நீட்டிக்கவும் ஆலோ சனை செய்யப்பட்டது. இதற்கான சாத்தியக்கூறு அறிக்கையும் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் பூந்தமல்லியிலிருந்து பரந்தூர் வரை மெட்ரோ ரயில் நீட்டி க்கவும் கோயம்பேட்டில் இருந்து ஆவடி வரை மெட்ரோ ரயில் நீட்டி க்கவும் கடந்த பிப்ரவரியில் தமிழக அரசு அனுமதி அளித்தது குறிப்பி டத்தக்கது. ஆனால் 3வது வழி தடத்தில் சிறுசேரியில் இருந்து கேள ம்பாக்கம் வழியாக கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு  இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில்  திட்டத்தை மாற்று  வழியில் செயல்படுத்துவது தொடர் பாக தமிழக அரசுக்கு மெட்ரோ  ரயில் நிறுவனம் பரிந்துரைத்துள் ளது. அதில் சிறுசேரியில் இருந்து  கேளம்பாக்கம் வழியாக திருப் போரூர் வரையும் தேவைப்பட்டால் மாமல்லபுரம் வரையில் நீட்டிப்பு  செய்வது தொடர்பாக பரிந்துரைக் கப்பட்டுள்ளது தெரிகிறது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறி யிருப்பதாவது:- சிறுசேரியில் இருந்து கிளாம் பாக்கம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்தை கைவிட முக்கிய காரணம், இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையும் மக்களின் வரவேற்பு மிக குறைவாகவே இருக்கும் என சாத்தியக்கூறு அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்த வழித்தடத்தை ஒட்டி போதிய கல்வி நிறுவனங்கள் அலுவல கங்கள் இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.  அதே நேரத்தில் இந்த திட்டத்தை மாற்றுவது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கும் என்று தெரிவித்துள்ளனர். அதேநேரம் பூந்தமல்லி யிலிருந்து பரந்தூர் வரையும் கோயம்பேட்டிலிருந்து ஆவடி வரை யில் மெட்ரோ ரயில் நீட்டிப்பு தொடர்பான திட்ட அறிக்கை தயாரிக்க தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. இதனை அடுத்து இரண்டு மாதத்தில் ஆலோசனை நிறு வனங்களைத் தேர்வு செய்து ஆறு மாதத்திற்குள் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து தமிழக அரசிடம் சமர்பிக்க முடிவு செய்யப்பட்டுள் ளது.

;