districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

தோழர் கே.வேலுசாமி காலமானார்

கோவை, மே 6- அரசு ஊழியர் சங்கத்தின் கோவை மாவட்டம் முன்னாள் செயலாளரும் ஓய்வு  பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட  துணைத் தலைவராகவும் செயல்பட்டு வந்த  தோழர் கே.வேலுசாமி உடல்நலக்குறை வால் திங்களன்று காலமானார் அன்னாரது மறைவு செய்தி அறிந்த வுடன் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடா ளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச்  செயலாளர் சி.பத்மநாபன் மற்றும் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.மனோ கரன், யு.கே. சிவஞானம், பீளமேடு நகரச் செய லாளர் கே.பாண்டியன், சிங்கை நகரச் செயலாளர் தெய்வேந்திரன், சூலூர் தாலுகா செயலாளர் சந்திரன், அரசு ஊழி யர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் நிசார் அஹமது, ஓய்வு பெற்றோர் சங்கத் தின் தலைவர்கள் அரங்கநாதன், மதன் உள்ளிட்ட திரளானோர் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் இறுதி நிகழ்ச்சி இருகூர் மின் மயானத் தில் நடைபெற்றது அங்கு நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பங்கேற்ற தலைவர் கள், கே.வேலுசாமியின் தொழிற்சங்க பணிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் பங்களிப்பு குறித்து இரங்கல் உரையாற் றினார்.

தொழிலாளி பலி

தொழிலாளி பலி உதகை, மே 6- நீலகிரி மாவட்டம், குன் னூர் அருகே உள்ள வெலிங் டன் ராணுவ மையத்தில் புதிய குடியிருப்புகள் கட்டு மானப் பணி நடைபெற்று வரு கிறது. இப்பணியை கோவை யைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் செய்து வந்த நிலையில், திங் களன்று காலை தொழிலாளர் கள் வழக்கம் போல் பணி செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென பக்கவாட்டு சுவரின் மண்  சரிந்து விழுந்தது. இதில்  தேனி மாவட்டம் போடிநாயக் கனூர் பகுதியைச் சேர்ந்த சக்தி (31) என்ற தொழிலாளி சிக்கிக் கொண்டார். இப்பக் கவாட்டு மண் சுவர் இடிந்து விழுந்ததில் மண்ணில் புதைந்து சக்தி அரை மணி  நேரத்துக்குப் பிறகு ஜேசிபி  இயந்திரம் மூலம் மீட்கப்பட் டார். பின்பு அவரை ஆம்பு லன்ஸ் மூலம் வெலிங்டன்  ராணுவ மருத்துவமனைக் குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பல னின்றி உயிரிழந்தார்.

மாநிலத்தில் முதலிடம் பெற்ற திருப்பூர் மாவட்டம்

திருப்பூர், மே 6 – தமிழக அளவில் பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில், திருப்பூர் மாவட்டம் 97.45 சதவிகி தம் தேர்ச்சி பெற்று முதலிடம் பெற்றுள்ள தற்கு மாணவர்கள், அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக் கண்ணன் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக் கையில், திருப்பூர் மாவட்டம் அண்மை காலத்தில் பிளஸ் 2 தேர்வில் மூன்று முறை  மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளது. மிகப்பெரும்பான்மை உழைப்பாளி மக்கள் இருக்கக்கூடிய இந்த மாவட்டத்தில் உயர்  கல்வி கற்பதற்கு கோவை, ஈரோடு உள்ளிட்ட  அண்டை மாவட்டங்களை நாடிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இம்மா வட்டத்தில் உயர்கல்வி தேவையைக் கருத் தில் கொண்டு தமிழ்நாடு அரசு உடனடியாக  இங்கு அரசு பொறியியல் கல்லூரி அமைக்க  வேண்டும். பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற  மாணவர்களுக்கு மட்டுமின்றி, தேர்ச்சி பெற  போராடிய மாணவர்களுக்கும் பாராட்டுவதா கவும், மனத்தளர்ச்சி அடையாமல் ஊக்கமு டன் முயன்று அடுத்த முறை வெற்றி பெறவும்  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

உதகை வருகிறார் கர்நாடக முதல்வர்

உதகை, ஏப்.6- கர்நாடக முதல்- மந்திரி சித்தரா மையா குடும்பத்தினருடன் இன்று (செவ்வாய்க்கிழமை) 5 நாள்  சுற்றுப்ப யணமாக ஊட்டி வருகிறார். இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. தமிழகம் உள்ளிட்ட பல இடங்களில் முதல் கட்டமாக தேர்தல் முடிந்தது.  இதேபோல் அண்டை மாநி லமான கர்நாடகாவின் முதல் கட்ட தேர் தல் கடந்த 26-ம் தேதி நடந்தது. இரண் டாம் கட்ட தேர்தல் இன்று (செவ்வாய்க் க்கிழமை) நடக்க உள்ளது.  நாடாளுமன்ற தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில்  முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.  இந்த நிலையில் கர்நாடக முதல்-மந் திரி சித்தராமையா தேர்தல் பரப்புரை முடிந்து 5 நாள் ஓய்வெடுக்க நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் வருகிறார்.  இதையொட்டி இன்று (செவ்வாய்க் கிழமை) காலை பெங்களூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கிளம்பும்  கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உதகை தீட்டுக்கள் மைதானம் வருகி றார். அங்கிருந்து கார் மூலம் கிளம்பி உதகை வென்லாக் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார்.  வருகிற 11ம் தேதி வரை 5 நாட்கள் இங்கிருந்து கர்நாடக மாநில தோட்டக் கலை துறை பூங்கா உள்பட பல்வேறு  இடங்களை சுற்றி பார்க்க இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடக முதல்-மந்திரி வருகையை யொட்டி நீலகிரி போலீசார் கூடுதல் பாது காப்பு பணியில் ஈடுபட்டு வருகின்ற னர்.

தேர்தல் நடத்தை விதிகளை திரும்பப்பெற  தொழிற்கூட்டமைப்பு வலியுறுத்தல்

கோவை, ஏப். 6- தொழிற்துறை சார்ந்த புதிய கோரிக் கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு  செல்ல முடியாமல் உள்ளோம், மக்க ளின் நலன் கருதி தமிழ்நாட்டில் தேர்தல்  விதிமுறைகளை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என தொழிற்துறை கூட் டமைப்பு வலியுறுத்தியுள்ளது.  தமிழ்நாடு குறுந்தொழில் மற்றும் கைத்தொழில் முனைவோர் (டேக்ட்) சங் கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஜேம்ஸ், தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கு அளித்துள்ள மனுவில்  தெரிவித்துள்ளதாவது, 18 ஆவது நாடா ளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு தமிழகத்தில் முதற்கட்டமாக ஏப்.19  ஆம்தேதி முடிவுற்றது.  தமிழகத்தில் உள்ள 39 நாடாளு மன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வ துக்கான தேர்தல் முடிவுற்று, வாக்க ளிக்கப்பட்ட இயந்திரங்கள் அனைத் தும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட் டில் உள்ளது. தேர்தல் முடிவுற்று இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில்  உள்ளது. நாடு முழுவதும் 7 கட்டங்க ளாக நடைபெறும் தேர்தல் நாள் வரை யில் 47 நாட்கள் நடத்தை விதிகள் தமிழ கத்தில் நடைமுறையில் இருக்கும் என் பது தமிழக மக்களின் அன்றாட பணிக ளுக்கு பெரும் அவதியை ஏற்படுத் தும்.  தேர்தல் முழுமையாக நடை பெற்று முடிந்த மாநிலங்களில் மாநில  அரசுகளின் செயல்பாடுகள் முடக்குவ தால் மாநில மக்களின் அனைத்து தேவைகளும் முடக்கப்படுகிறது. நாங் கள் தமிழ்நாட்டின் அரசிடம் இருந்து  புதியதாக கோரிக்கை முன்வைக்கவோ நடைமுறையில் ஏற்படும் பிரச்சனை களை மக்கள் பிரதிநிதிகள் மூலம் அர சின் கவனத்துக்கு கொண்டு போக முடி யாமல் உள்ளோம்.  நடத்தை விதிகள் உள்ளதால் அரசு  அதிகாரிகளை சந்தித்து முறையிட முடி யாமலும் கடுமையாக பாதித்து வருகி றோம். வாக்கு பதிவு முடிந்தும் 47 நாட் கள் மாநிலத்தின் செயல்பாடுகளை முடக்குவது அந்த மாநிலத்தின் மக்க ளின் உரிமைகளை பாதிப்பதாக நாங் கள் கருதுகிறோம். தேர்தல் அறிவிக்கப் பட்டதில் இருந்து மொத்தம் வாக்கு எண்ணப்படும் நாள் வரை 80 நாட்கள் மாநில மக்கள் மாநில அரசிடம் தங்கள்  தேவைகளை கேட்டு பெற முடியாத நிலையில் உள்ளோம்.  எனவே, தங்கள் மத்திய தேர்தல்  ஆணையத்தில் முறையிட்டு உடனடி யாக தமிழகத்தில் ஓட்டு எண்ணப்படும் மையங்களுக்கான தனியாக தேர்தல் அதிகாரிகளை நியமனம் செய்திட வேண்டும்.  மாநிலத்தில் உள்ள அரசு  இயந்திரம் முழுமையாக செயல்படு வதற்கு அனைத்து துறைகளிலும் தேர் தல் நடைமுறை திரும்ப பெற இந்திய  தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற  வேண்டும் என அதில் வலியுறுத்தி உள் ளார்.


 

;