districts

img

ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்படும் சட்டவிரோத எரியூட்டு தகன மேடை! மலைக்கிராம மக்கள் அச்சம்; ஆட்சியரிடம் முறையீடு

கோயம்புத்தூர், மே 21- ஈஷா யோகா மைய வளாகத் தில் சட்ட விரோதமாக எரியூட்டும் தகன மேடை அமைக்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது அப்பகுதி மக்களை அச்சத்திற்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது.

இதுபற்றி ஈஷா எதிர்ப்பு கூட்டு  இயக்கத்தினர், கோவை மாவட்ட  ஆட்சியரிடம் மனு அளித்துள்ள னர்.  அந்த மனுவில் கூறப்பட்டிருப்ப தாவது:

ஈஷா பவுண்டேசனின் அத்துமீறல் நடவடிக்கை
கோவை, இக்கரை போளு வாம்பட்டி கிராமத்தில் மக்கள் குடி யிருந்தும் விவசாயம் செய்தும் வாழ்வாதாரம் நடத்தி வருகின்றார். இக்கிராமத்தில் சுப்பிரமணியம் என்பவர் குடியிருந்து வரும் வீட்டு காம்பவுண்ட் சுவரை ஒட்டியும் அவரது நிலத்தில் உள்ள குடிநீர் கிணற்றுக்கு அருகிலும் ஈஷா பவுண்டேஷன் நிறுவனத்தால் சட லம் எரியூட்டு தகனமேடை அமைக்  கப்பட்டு வருகிறது. 

இது சம்பந்தமாக கடந்த 09.10. 2019 அன்று செம்மேடு கிராமம், முட்டத்துவயல் பகுதியில் விவசா யம் செய்து வரும் சிவஞானம் என்ப வர் அனைத்து அரசாங்க அமைப்பு களுக்கும் பதிவு அஞ்சல் மூலம் எரி யூட்டு தகன மேடை அமைப்பதற்கு ஆட்சேபணை தெரிவித்திருந்தார்.

இது சம்பந்தமாக கிராமவாசி களிடம் எவ்வித அறிவிப்பு தரா மலும், எவ்வித விளக்கமும் கோரா மலும் தற்சமயம் எரியூட்டு தகன மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. 

மலைக் கிராம மக்களை அச்சுறுத்தும் தகன மேடை
இக்கரை போளுவாம்பட்டி கிரா மமானது மலைப் பாதுகாப்பு ஆணையத்துக்கு (HACA) உட் பட்ட கிராமப் பஞ்சாயத்தாகும். அது தவிர இக்கிராமமானது யானை வழித் தடமும். அதன் வாழ்விடமுமாகும். 

இருப்பினும் மேற்படி ஈஷா பவுண்டேஷன் நிறுவனமானது தனது பெயரிலும், தனது இதர நிறு வனங்களின் பெயரிலும் அக்கிரா மத்தில் சுமார் 285 ஏக்கர் நிலத்தை கிரையம் பெற்றுள்ளனர். இந்த  நிலத்தில் ஈஷா பவுண்டேஷன் நிறு வனமானது இயற்கைக்கு மாறாக பலவிதமான கட்டுமானங்களை மேற்கொண்டும், விவசாய பூமி களை தரிசாக விட்டும் விவசாய சூழ்  நிலைக்கு இடையூறு விளைவித்  துள்ளது. இதற்கு ஆட்சேபணை தெரிவிக்கும் நபர்களை அக்கிரா மத்திலிருந்து விரட்டி வருகிறது. தற்  சமயம் மேற்படி எரியூட்டு தகன  மேடை அமைக்கப்பட்டு வருகிறது. 

ஏற்கெனவே இடுகாடு, சுடுகாடுகள் உள்ளன
இக்கரை போளுவாம்பட்டி கிரா மத்தில் சுமார் 6300 நபர்களுக்கு  குறைவாகவே வசித்து வருகின்ற னர். மேலும் அக்கிராமத்தில் 2 இடு காடுகளும், செம்மேட்டில் ஒரு இடு காடு மற்றும் சுடுகாடும் உள்ளது. 

அப்பகுதியைச் சேர்ந்த ஆதி வாசிகளுக்கு மடக்காடுபதி மற்றும்  முள்ளாங்காட்டுபதி ஆகிய இடங்க ளில் தனித்தனியாக சுடுகாடும் உள்  ளது. மேலும் மலைவாழ் மக்கள் தங்களது வாழ்க்கை முறைப்படி இறந்தவர் உடல்களை புதைப்பது  வழக்கமாகும். அவர்களுக்கு எரி யூட்டு மையம் தேவையில்லை. 

மேலும், அக்கிராமத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில்  உள்ள மத்துவராயபுரத்தில் ஒரு தகன எரியூட்டு மையமும், 10 கிலோ  மீட்டர் தொலைவில் உள்ள தொண்  டாமுத்தூரில் மற்றொரு தகன எரியூட்டு மையமும் உள்ளது. 

எனவே இக்காரணங்களின் அடிப்படையில் தற்சமயம் ஈஷா பவுண்டேஷன் அமைத்துவரும் எரியூட்டு தகன மேடை முற்றிலும்  வேண்டுமென்றே மக்களை விரட்டு வதற்காக ஏற்படுத்தப்பட்டதாகும். 

நாளைக்கு 14 உடல்களை எரிக்க ‘ஈஷா’ ஏற்பாடு
இவ்வுண்மைகளை மறைத்து  ஈஷா பவுண்டேஷன் நிறுவனமா னது குடியிருப்பு மையத்திலிருந்து 30 அடி இடைவெளிக்குள் 24 மணி நேரமும் உடல்களை எரிப்பதற்கு அனுமதி பெற்று ஒரு நாளைக்கு 14 உடல்கள் வரை எரிக்கும் தகன  மேடையை உருவாக்கி வருகின் றது. 

உண்மையில் அத்தகைய தகன  எரியூட்டு மையம் அமைக்கப்பட் டால் கிராமவாசிகளின் வாழ்வி டமே கேள்விக்குறியாகும். மேற்படி தகன எரியூட்டு மையத்திலிருந்து வெளியாகும் உடல்களை எரித்த சாம்பல் புகையானது இயற்கை வாழ்விற்கு அச்சுறுத்தும் வகை யில் நோய்களை ஏற்படுத்தும்.

மக்களின் அனுமதி பெற்றதாக மோசடி
இக்கரை போளுவாம்பட்டி கிரா மப் பஞ்சாயத்தைச் சேர்ந்த மக்க ளின் அனுமதி பெறாமல், வேறு கிராம மக்களிடம் ஆட்சேபணை இன்மை பெற்றிருப்பதாக கூறுவது  முற்றிலும் சட்டத்திற்கு புறம்பான தாகும். 

இக்கரை போளுவாம்பட்டி கிரா மத்தில் ஈஷா மையம் எரியூட்டு தகன  மேடை அமைப்பது சட்டப்படி தவ றாகும். மேற்படி ஈஷா பவுண்டே ஷன் நிறுவனத்தின் செயலானது,  கிராமவாசிகளை அடியோடு வெளி யேற்றி முழுக் கிராமத்தையும் வணிக நோக்கத்தில் ஆக்கிரமிப்பு செய்து லாபம் ஈட்டுவதற்கான ஏற்  பாடுகளாகவே உள்ளது.

எனவே, தாங்கள் இதுகுறித்து விசாரித்து எங்களது புகாரை ஏற்று தற்சமயம் ஈஷா பவுண்டேஷன் நிறுவனத்தால் மேற்படி நிலத்தில்  அமைக்கப்பட்டு வரும் உடல்கள் எரியூட்டு தகன மேடை அமைப்ப தற்கான உத்தரவை ரத்து செய்து இயற்கை சூழ்நிலையை மீட்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் வலியுறுத் தப்பட்டு உள்ளது.

முன்னதாக இம்மனுவை ஆட்சி யரிடம், தந்தை பெரியார் திராவிடர்  கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்  கள் அதிகாரம் உள்ளிட்ட மார்க்சிய- பெரியாரிய- அம்பேத்கரிய முற் போக்கு அமைப்புக்களைச் சேர்ந்த  நிர்வாகிகள் அளித்தனர்.

ஜூலையில் மீண்டும் துவங்கும் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்சென்னை, மே 21-

முதற்கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி களுக்காகத் தொடங்கி வைக்கப்பட்ட “மக்க ளுடன் முதல்வர்” திட்டத்தில் அன்றாடம் பொது மக்கள் அதிகமாக அணுகும் முக்கியத் துறை கள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்  பட்டு, உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மற்றும்  கிராம ஊராட்சி அளவில் சம்பந்தப்பட்ட துறை கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே குடை யின் கீழ் கோரிக்கைகளைப் பெற அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

“மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் முதற் கட்ட வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட மாக தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் உள்ள  388 ஒன்றியங்களில் அடங்கியுள்ள 12,525 கிராம  ஊராட்சிகளில் ஏறத்தாழ 2,500 முகாம்கள் நடத்  திட அரசு முடிவு செய்துள்ளது. வரும் ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை இந்த முகாம்களை நடத்திடவும், இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது ஆகஸ்ட் 15 முதல் அக்டோபர் 15-குள் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்  கில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டு “மக்களு டன் முதல்வர்” திட்டம் இரண்டாம் கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.
 

;