districts

தூய்மைப் பணியாளர்களின் பணி நேரம் மாற்றம் சிஐடியு கோரிக்கையை ஏற்றது ஈரோடு மாநகராட்சி

ஈரோடு, மே 6- வெயிலின் தாக்கம் அதிகரித் துள்ளதால், தூய்மைப் பணியாளர்க ளுக்கு பணி நேரத்தை மாற்றம் செய்ய வேண்டும் என சிஐடியு கோரிக்கை விடுத்துள்ள நிலையில்,  மதிய நேர பணிகள் ரத்து செய்யப் பட்டு அவர்களது பணி நேரம் மாற்றப் பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக 108 டிகிரி முதல் 110 டிகிரி வரை வெயிலின் தாக்கம் அதி கரித்து வருகிறது. மேலும் வெயில்  தாக்கம் காரணமாக பகல் நேரங்க ளில் சாலைகளில் குழந்தைகள் முதல்  முதியவர்கள் வரை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாநகராட் சியில் தூய்மைப் பணியாளர்களின் வேலை நேரம் என்பது காலை 6 மணி முதல் முற்பகல் வரையும், பகல்  2 மணிக்கு தொடங்கி மாலை 5.30  வரை என்பதால் தூய்மை பணியாளர் கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள் கின்றனர். மேலும் குப்பைகளை சேகரிக்கவும், அவற்றை குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லவும் 4  மண்டலங்களிலும் சுமார் ஆயிரத்திற் கும் மேற்பட்டடோர் பணியாற்றி வரு கின்றனர். இது தவிர ஒவ்வொரு மண்டலத்திலும் தலா 25 பேர் வரை சாக்கடைகள், சாக்கடை சந்திப் புகள், அடைப்புகள், குப்பை மண்டிக்  கிடக்கும் புதர்களை அகற்றும் பணி யில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து தூய்மைப் பணி யாளர்களை வாட்டிவதைக்கும் இந்த வெயில் கொடுமையிலிருந்து பாது காக்க வேண்டுமென சிஐடியு சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது. இந்நி லையில், மாநகராட்சி தூய்மைப் பணி யாளர்களின் வேலை நேரத்தை காலை 6 மணி முதல் 11 மணி வரை  ஒரு வேலையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை 2 ஆவது வேலையும் என மாற்றப்பட்டுள்ளது. இதைப்போல் குப்பை கிடங்கு மற்றும் குப்பைகளை உரமாக்கும் மையங்களிலும் பணியாற்றும் தூய் மைப் பணியாளர்களுக்கும் பணி நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த வெயில் நேர பணிகள் ரத்து செய் யப்பட்டுள்ளதால் மாநகராட்சி தூய் மைப் பணியாளர்கள் நிம்மதி அடைந் துள்ளனர். இதுகுறித்து மாநகராட்சி நகர்  நல அலுவலர் மருத்துவர் பிரகாஷ்  கூறியதாவது, வெயிலின் தாக்கத் தால் தூய்மைப் பணியாளர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க ஈரோடு  மாநகராட்சியில் 4 மண்டலங்களி லும் பணியாற்றும் தூய்மைப் பணியா ளர்களது பணி நேரம் மாற்றப்பட் டுள்ளது. இது வெயில் தாக்கம் குறையும் வரை மதிய நேர பணிகள் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங் கப்படமாட்டாது. வெயில் தாக்கம் குறைந்த பின்  வழக்கம்போல் பணிகள் நடக்கும். வெயில் தாக்கத்தால் ஏற்படும் நீர் சத்து குறைபாட்டினை போக்க மாநக ராட்சியில் பணியாற்றும் 2 ஆயிரம் தூய்மைப் பணியாளர்களுக்கும் தயிர், மோர், உப்பு சர்க்கரை கரை சல், பழச்சாறு வகைகள் திங்களன்று  முதல் வழங்க திட்டமிட்டுள்ளோம். அத்தியாவசிய தேவை இன்றி பகல் 12 மணி முதல் மாலை 4 மணி  வரை பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என தெரிவித்தார்.

;