districts

ராஜீவ் காந்தி தொடர்பான மோடியின் பேச்சுக்கு 200 பேராசிரியர்கள் கண்டனம்

புதுதில்லி, மே 7-ராஜீவ் காந்தி தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சுக்கு கண்ணியத்தை குறைக்கும் செயல் என தில்லி பல்கலைக்கழகத்தின் 200 பேராசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வரும் பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் ஒருவரையொருவர் தொடர்ந்து தாக்கி பேசி வரு கின்றனர். இதில் சமீபத்திய நிகழ்வாக, ராகுல் காந்தியின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி குறித்து சில கருத்துகளை பிரதமர் மோடி வெளியிட்டு இருந்தார். உத்தரபிரதேசத்தில் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி பேசும்போது, ‘உங்கள் தந்தை (ராஜீவ் காந்தி) கறைபடியா கரத்துக்கு சொந்தக் காரர் (மிஸ்டர் கிளீன்) என அவரது சேவகர்களால் கருதப்பட்டார். ஆனால் அவரது வாழ்க்கையோ ‘ஊழல் நம்பர் ஒன்று’ என்ற நிலையில்தான் முடிந்தது’ என்று கூறினார். கடந்த 1980–களில் பரபரப்பாக பேசப்பட்ட போபர்ஸ் ஊழலில் ராஜீவ் காந்தியை தொடர்புபடுத்தி பிரதமர் மோடி இவ்வாறு பேசி இருந்தார். தனது தந்தை குறித்த மோடி யின் இந்த கருத்துக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்தார். டுவிட்டரில் வெளியிட்ட தகவலில் ‘மோடிஜி, போர் முடிந்துவிட்டது. உங்கள் கர்மா உங்களுக்காக காத்திருக்கிறது. எனது தந்தை பற்றிய உங்களின் உள்ளார்ந்த உணர்வுகள் ஒருபோதும் உங்களை பாதுகாக்காது. உங்களுக்கு எனதுஅன்பும், மிகப்பெரிய அரவணை ப்பும்... ’ என்று குறிப்பிட்டு இருந்தார். ராஜீவ் காந்தி பற்றிய பிரதமர்மோடியின் கருத்து காங்கிரசாரி டையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். போபர்ஸ் ஊழலில் ராஜீவ் காந்திக்கு எதிராக ஆதாரம் இல்லை என உயர்நீதிமன்றமே கூறிய பிறகும், பிரதமர் மோடி இவ்வாறு கூறுவது கண்டனத்துக்குரியது என அவர்கள் குறிப்பிட்டனர். எதிர்க்கட்சி தலைவர்களும் கடும் கண்டத்தை தெரிவித்து வருகிறார்கள். ராஜீவ் காந்தி தொடர்பான பிரதமர் மோடியின் பேச்சு கண்ணியத்தை குறைக்கும் செயல் என தில்லி பல்கலைக்கழகத்தின் 200 பேராசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.“பொய்யான மற்றும் கண்ணி யத்தை குறைக்கும் கருத்துக்கள் மூலம் பிரதமர் அலுவலகத்தின் கவுரவத்தை குறைக்கும் செயல்,” என்று பேராசிரியர்கள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே தில்லி கேஎம்சி கல்லூரியின் இரு பேராசிரியர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்கள் எனவும் செய்தி வெளியாகியுள்ளது. கண்டனம் தொடர்பான கடிதம் வெளியானதும், நாங்கள் கையெழு த்திடவில்லை என பேராசிரியர் மனோஜ் மற்றும் விஜிகா மறுப்பு தெரிவித்துள்ளாக ஆங்கில செய்தி சேனல் செய்தி வெளியிட்டது. இருப்பினும், மேரி கல்லூரியை சேர்ந்த பேராசிரியர் ரிச்சா ராய் பேசுகையில், “கடிதத்திற்கு நான் ஆதரவுதான் கொடுத்தேன். இது ஒரு உண்மையான கடிதம், அதில் கையெப்பம் இடவில்லை என இரு பேராசிரியர்கள் மறுப்பதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. மற்றவர்கள் அதை மறுக்கமாட்டார்கள் என நம்புகிறேன்,” எனக் கூறியுள்ளார்.

;