districts

img

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்  

ஓரிரு இடங்களில் அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.  

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழைக்கும் வாய்ப்புள்ளதால் அம்மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.  மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 12 ஆம் தேதி முதல் இன்று வரை 24.9 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாகவும், அம்மாவட்டத்தின் இயல்பான மழைப்பொழிவு அளவை விட இது 10 மடங்கு அதிகம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால், வரும் 18 ஆம் தேதி வரை வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் வரும் 17 ஆம் தேதிவரை அரபிக்கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து கன்னியாகுமரியில் தொடர் கனமழையால் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

;