districts

img

சாதி, மதம் கடந்து அணிதிரள்வீர்! மே தினக் கூட்டத்தில் கே. பாலகிருஷ்ணன் அழைப்பு

கடலூர், மே 2 - கார்ப்பரேட்டுகளுக்கு ஆதர வாக, தொழிற்சங்க உரிமைகளை காவுகொடுக்கும் மோடி தலைமை யிலான பாஜக ஆட்சியை தூக்கி யெறிய சாதி, மதம் கடந்து தொழி லாளர்கள் உறுதிமிக்க போராட்டத் தை நடத்த வேண்டும் என்று கே. பால கிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.

தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைத் திருநாளான- 138-வது மே  தினத்தை முன்னிட்டு, சிஐடியு - ஏஐ டியுசி தொழிற்சங்கங்கள் சார்பில் கட லூரில் மாபெரும் ஊர்வலம் மற்றும் அதன் நிறைவில் மஞ்சக்குப்பம் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு  பொதுக்கூட்டம் நடைபெற்றது. 

இதில், பங்கேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன் பேசியதாவது: 

“ஒன்றிய பாஜக அரசு கடந்த  பத்தாண்டு காலமாக தொழிலாளர் களின் உரிமைகள் பலவற்றினையும் படிப்படியாக பறித்துவிட்டது. தொழிலாளர்களின் உரிமை என்பது பாஜக தயவினால் பெற்றது கிடை யாது. நீண்ட நெடிய போராட்டத்தின் மூலம் பெறப்பட்டவை. 

ஆட்சியாளர்களின் வஞ்சகத் தால் தொழிலாளர்கள் பிரிந்து கிடக் கிறார்கள். அடிப்படை உரிமைகள் கூட இல்லாமல் தவித்துக் கொண்டி ருக்கிறார்கள். அவர்கள் அனை வரையும் ஒன்றுசேர்க்கும் மகத்தான கடமை தொழிற்சங்கங்களுக்கு உண்டு. போராட்ட பாரம்பரியம் தான் நம்மை பாதுகாக்கும்.

கிராமப்புற விவசாயிகள் 10 விரலால் பாடுபட்டும், அரை வயிறு சோற்றுக்கு வழி இல்லாமல் திண் டாடி வரும் நிலை தொடர்கிறது. ஒன்றிய பாஜக அரசு தொழிலாளி மீது தாக்குதல் தொடுக்கிறது. வாழ் வாதாரப் பிரச்சனைகள் மீது கை  வைத்துள்ளது. இவை அனைத்தை யும் மீட்டெடுக்க சாதி, மதங்களை கடந்து உறுதியுடன் போராட வேண்டும்.

தொழிலாளர்களை வடக்கு, தெற்கு என்று பாகுபடுத்தும் வேலை யை ஒரு பிரிவு செய்து கொண்டி ருக்கிறது. இந்தியா முழுவதும் தமி ழர்கள் பணியாற்றுகின்றனர். வடக்கே இருந்து தெற்கிலும், தெற்கிலிருந்து வடக்கே-யும் புலம்பெயர்தல் என்பது இந்தக் காலத்தில் அதிகரித்துள்ளது. உழைப்பாளியை வடக்கு - தெற்கு என்று பாகுபடுத்துவது, சாதியால் பாகுபடுத்துவது, மதத்தால் பாகு படுத்தி சீர்குலைப்பது மிக மிக ஆபத்து.

நாட்டில் அறிவியல் வேகமாக வளர்ந்துவிட்டது. கடுமையாக உழைத்து உற்பத்தியை அதிகப் படுத்தியிருக்கிறோம். அறிவியல் பிரம்மாண்டமாக வளர்ச்சியடைந் தும் பசி போய்விட்டதா? பட்டினி இல்லாத நிலை உள்ளதா? என்றால் இல்லை. இதற்கெல்லாம் விடிவு கிடைக்க வேண்டும் என்றால் ஒன்றிய ஆட்சியதிகாரத்தில் உள்ள மோடி ஆட்சியை அகற்றுவது மட்டும் ஒரே தீர்வு.”இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநி லச் செயலாளர் எம். கண்ணகி, ஏஐ டியுசி மாவட்ட பொதுச் செயலாளர் குணசேகரன், சிஐடியு மாவட்டச் செயலாளர் டி. பழனிவேல், மாநிலக் குழு உறுப்பினர் என்.ஆர்.  ஜீவானந்தம், மாவட்ட பொரு ளாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் ஜி.பாஸ்கரன், ஏஐடியுசி மாவட்டத் தலைவர் வி.குளோப் ஆகியோர் தலைமை தாங்கினர். 

;