court

img

பிச்சை எடுப்பது சமூக-பொருளாதார பிரச்சனை..... பொதுநல மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு....

புதுதில்லி:
வறுமைதான் பிச்சை எடுக்க காரணம். பொது இடங்களிலும், டிராபிக் சிக்னல்களிலும் பிச்சை எடுப்பதை தடுக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித் துள்ளது.

கொரோனா தொற்றை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் வீடற்றவர்களுக்கும், பிச்சைக்காரர்களுக்கும் மறுவாழ்வு திட்டங்களை அளிக்கக் கோரியும், தடுப்பூசி செலுத்தக் கோரியும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக பொதுஇடங்கள்,  டிராபிக் சிக்னல்களிலும், சந்தைகள், கோவில்கள் உள்பட பொது இடங்களில் பிச்சைக்காரர்கள் பிச்சை எடுக்க தடை விதிக்க வேண்டும். பிச்சைக்காரர்களை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று தில்லியை சேர்ந்த குஷ் கல்ரா, பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு மீதானவிசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதி ஷா தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. 

அப்போது  பிச்சைக்காரர்கள் விவகாரத்தில் வசதி படைத்தவர்களின் கண்ணோட்டத்தில் நீதிமன்றம் முடிவு எடுக்க முடியாது. வறுமை தான் பிச்சை எடுக்க காரணம். பொது இடங்களிலும், டிராபிக் சிக்னல்களி லும் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கமுடியாது என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இது ஒரு சமூக-பொருளாதார பிரச்சனை. ஏழ்மை  மட்டும் இல்லை யென்றால் யாரும் பிச்சை எடுக்க விரும்பமாட்டார்கள். அவர்கள் பிச்சை எடுக்க அனுமதிக்கக் கூடாது என்று நாங்கள் கூற முடியாது என தெரிவித்து, பொதுநல மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் இந்த பொதுநல மனு தொடர்பாக ஒன்றிய அரசும், தில்லிஅரசும் பதிலளிக்க வேண்டும் என்றும் பிச்சை எடுப்பவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். இதுகுறித்து ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.  வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

;