articles

img

ஆபத்தின் நுழைவாயிலில் உலகம் - ரகு

ஐ.நா.சபையின் உலக வானிலை அமைப்பு (WMO) தன்னுடைய 2023 ஆம் ஆண்டுக் கான காலநிலை அறிக்கையை கடந்த மாதம் வெளியிட்டது. புவி வெப்பமடைதல் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது என்ற அனைவரின் அச்சத்தை யும் உறுதி செய்தது. முன்பு நாம் நினைத்ததைக் காட்டிலும் காலநிலை மாற்றம் மற்றும் அதன் தாக்கங் கள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது என்பதற்கான பல ஆதாரங்களையும் வழங்குகிறது. 

சாதனை படைத்த ஆண்டு 

காலநிலை மாற்றங்களை உணர்த்தும் வகையில் எல்லா வகையிலும் அது பாதிப்புகளை வெளிக் கொணர்ந்தது என்று உலக வானிலை அமைப்பு (WMO) அறிக்கை கூறுகிறது. 1850-1900 - தொழில் மய காலத்தின் சராசரியை விட 2023-இன் வெப்ப நிலை 1.5 டிகிரி (+0.12) சென்டிகிரேட் அதிகமாக இருந்தது. பாரீஸ் உடன்படிக்கையில் நிர்ணயிக்கப் பட்ட 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வு வரம்பு டன் ஒப்பிடும்போது இது மிகவும் ஆபத்தானது. கால நிலை மாற்றத்திற்கான அரசு சார் குழு (IPCC)-வின் பல அறிவியல் அறிக்கையிலும் இது மீண்டும் வலி யுறுத்தப்பட்ட ஒன்றாகும். அதையும் தாண்டி ஒரு மீள முடியாத நிலைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகை யில் காலநிலை மாற்றம் அடையலாம்.  புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றத் திற்கு முக்கியக் காரணமான கார்பன்-டை-ஆக் ஸைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு போன்ற பசுங்குடில் வாயுக்களின் (Greenhouse Gases) வளி மண்டலச் செறிவுகளும் அதிக அளவில் இருந்தன என்ப தில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இந்த மூன்று  வாயுக்களின் செறிவு முறையே 417.9 ppw, 1928 ppb மற்றும் 335.8ppb ஆகும். இதுவும் முறையே 154 சத வீதம், 264 சதவீதம் மற்றும் 154 சதவீதம் அனுமதிக் கப்பட்டதைவிட அதிகமாகும். தொழில்துறைக்கு முந் தைய நிலைகளைக் காட்டிலும் இந்த மூன்று வாயுக்களு மே மிக மிக அதிக விகிதத்தில் அதிகரித்து வருகின்றன. 

ஆபத்தின் விளிம்பில்...

420 ppw என்ற கார்பன்டை ஆக்ஸைடின் வளி மண்டல செறிவு கடக்கக் கூடாத எல்லைக்கோடாகும். வெப்பநிலை உயர்வைப் போலவே வளிமண்டல கார் பன்டை ஆக்ஸைடு அளவும் விளிம்பை மீறும் ஆபத்தில் தான் உள்ளது. இந்த உலக வானிலை அமைப்பின் அறிக்கை, அனைத்து முக்கியமான காலநிலைத் தாக்கங்களி லும் மிகவும் மோசமடைந்துள்ளன என்பதையே காட்டு கின்றது.

கடல்களின் நிலை!

கடல் மட்டங்கள் தொடர்ந்து உயருகின்றன. முன்பை விட மிக வேகமாகவும் இதுவரையில்லாமல் மிகவும் அதிகபட்ச விகிதத்திலும் உயர்ந்து வருகின் றன. 1993- 2002 வருடத்தில் 2.13 மிமீ உயர்வு என்பது டன் ஒப்பிட்டால் 2014-23 பத்தாண்டில் 4.77 மிமீ அள விற்கு கடல்மட்டம் உயர்வு கணக்கிடப்பட்டுள்ளது. நிலத்தில் வெப்ப அலைகளின் உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் நேரடியாக உணரும் அளவிற்கு கடல் வெப்பநிலை உயர்வின் பாதிப்புகளை அவர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை அல்லது குறை வாகவே அறிந்துள்ளனர்.  காலநிலை மாற்றத்தின்  கடல்களின் வெப்பமயமா தல் மிகவும் தொடர்ந்து கவனிக்கப்படும் நிகழ்வுக ளில் ஒன்றாகும். பசுங்குடில் வாயுக்கள் ஏற்படுத்தும் வெப்பஉயர்வை உண்மையில் கடல்கள் உறிஞ்சு கின்றன. இதனால் பிராந்திய மற்றும் உலக அளவி லான வானிலை முறைகளை பாதிக்கிறது. கடல் நீரோட் டங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதால் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப் புகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மனி தர்களின் வாழ்நிலையையும் பாதிக்கிறது. கடலுக்கு அடியில் காணப்படும் பவளப்பாறைகளை வெளுக்கச் செய்கிறது. கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலத்தையும் மாற்றத்திற்குள்ளாக்குகிறது.

கடல்வெப்பம், கடல் குளிர் அலைகள்!

மத்திய தரைக்கடல் மற்றும் வடக்கு அட்லாண்டிக் பகுதிகளில் கடல்வெப்ப அலைகள் (MHW) சராசரி யைக் காட்டிலும் 3 டிகிரி செல்சியஸ் அதிகவெப்ப நிலையை 2023-இல் அடைந்தன. எதிர்பார்த்தபடி, கடல் குளிர் அலைகள் ஏற்படுவது அதன் அதிகபட்ச மான குளிர்ச்சி இரண்டுமே நிகழவில்லை. பெருங்கடல்களில் அமிலத்தன்மை அதிகரிப்பதும் சாதனை அளவை எட்டியுள்ளது. முன்பைக் காட்டிலும் மிக அதிக விகிதத்தில் உயர்ந்து வருகிறது. ஆண்டு தோறும் வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்ஸைடில் மூன்றில் ஒரு பகுதியை உறிஞ்சி பின்னர் அமிலத் தன்மையை கடல்நீரில் ஏற்படுத்துகின்றது. இது கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளில் பரவலான தாக்கங்களையும் உண்டாக்குகிறது. 

கிரையோஸ்பியர் 

துருவப்பனி, பனிக்கட்டிகள், நிரந்தரப் பனி மூடிய பனிப்பாறைகளை (கிரையோஸ்பியர் என அழைக்க லாம்) காலநிலை மாற்றம் கடுமையாகப் பாதிக்கிறது. இதுவும் பிராந்திய மற்றும் உலகளவில் பாதிப்பை உண்டாக்குகிறது. நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களை பாதிக்கும் திறனை இதனால் ஏற்படும் வியத்தகு மாற்றங்கள் கொண்டுள்ளது.  ஆர்க்டிக் கடல்பனி பல ஆண்டுகளாக சுருங்குகி றது. 1975ஆம் ஆண்டில் செயற்கைக்கோள் மூலம் பதிவு செய்யத் துவங்கியதிலிருந்து இது தற்போது மிகக் குறைந்த அளவிற்கு வந்துள்ளது. பனி நிலப்பரப்பு குறைந்து கொண்டே வருகிறது. கடந்தாண்டு 4.23 சதவீதம் என்பது இது வரையிலேயே பதிவானதில் மிகக் குறைந்த அளவாகும். கடந்த 30 வருடங்களில் 20 சத வீதம் குறைந்துள்ளது. அண்டார்டிக் பனியின் பரப்பு 1.79 சதவீதம், 1991 ஆம் ஆண்டில் அதிகபட்சமாக 17 மில்லி யன் சதுர கி.மீ, 2021 ஆம் ஆண்டில்1.5 மில்லியன் சதுர கி.மீ பரப்பளவு குறைந்துள்ளது. 

உலக துருவ பனிக்கட்டிகள், காலநிலை மற்றும் வானிலை அமைப்புகள் ஆகியவை கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள், உயிரியல் பன்முகத்தன்மை, மக்களின் வாழ்க்கை மற்றும் ஆதாரங்களில் நீண்ட கால விளை வுகளை ஏற்படுத்துகின்றன. துருவப் பனி, அதையொட் டிய பனியால் மூடப்படும் நிலம் வெண்மையாக இருப்ப தால் சூரிய ஒளியை பிரதிபலிக்கிறது. இது ஆல்மிடோ  விளைவு. இது மற்ற பகுதிகளில் உறிஞ்சப்படும் வெப் பத்தை எதிர்க்கிறது. அதிக துருவப் பனி உருகும், குறைந்த சூரிய வெப்பம் மீண்டும் அதிக வெப்பமயமாத லுக்கு வழிவகுக்கும்.  உருகும் துருவப்பனி ஏற்கனவே நிரந்தரமாக உறைந்த துருவப்பகுதிகளை கப்பல் போக்குவரத்துக் கும் புதைவடிவ எரிபொருள், கனிம இருப்புகளை பிரித் தெடுக்கும் எதிர்காலத் தொழில்களுக்கும் திறப்புகளை ஏற்படுத்துகிறது. துருவ நிலம் மற்றும் கடல் சுற்றுச் சூழல் பாதிப்புடன் இடையூறு ஏற்படுகிறது. பனி உருகு வதால் வனவிலங்குகளின் வாழ்விடம் சீர்குலைவு ஏற்பட்டு பல உயிரினங்களை அது நேரடியாகவே பாதிக் கிறது. மனித - விலங்கு மோதலையும் அதிகரிக்கி றது. இரண்டுக்குமே அதிக தீங்கு விளைவிக்கிறது. உருகும் பனிக்கட்டிகள் மற்றும் உறைந்த பகுதிகள் உடைப்பு ஏற்கனவே அதற்கு அடியில் சிக்கியிருக்கும் மீத்தேனை வெளியேற்றுகிறது. காலநிலை மாற்றத்தை இது மேலும் துரிதப்படுத்துகிறது. 

உருகும் பனிப்பாறைகள் 

மேற்கு வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கடந்த காலங்களில் பனிப்பாறைகள் வேகமாக உருகி வந்ததை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. வட அமெரிக்கா மற்றும் தென் மத்திய ஐரோப்பாவின் அதே பிராந்தி யத்தில் சுவிட்சர்லாந்தில் மிக வேகமாக பாதிக்கப்பட்டுள் ளதால் பனிப்பாறைகள் அடிக்கடி ஏற்படும் தீவிர காட்டுத்தீயினால் பாதிக்கப்படுகின்றன. இந்தப் பகுதி களில் வெப்பமான கோடை மற்றும் குறைவான பனிப் பொழிவு ஏற்படுகின்றன. இது புதிய மற்றும் அண்மை யில் ஏற்பட்ட பனிக்குறைப்பினால் இருண்ட பகுதியாக மாறுகிறது. இதனாலும் வெப்பமயமாதலும் அதிகரிக்கி றது. காட்டுத் தீயினால் துகள்கள் பனிப்பாறையின் மேல் படிகிறது. நம் நாட்டில் மேற்கு இமயமலையில் நன்கு  உருவான பனிப்பாறைகள் உருகுதல் ஏற்படும் போதும் இதனையொத்த சிக்கல்கள் உருவாகின்றன. அமெ ரிக்க மற்றும் ஐரோப்பியப் பகுதிகளை விட இந்தியா வில் ஏற்படுவது தீவிரத்தன்மை குறைவானது. 

அதிதீவிரமான நிகழ்வுகள் 

2023ஆம் ஆண்டின் கடுமையான பனிப்பொழிவு, சூறாவளிப் புயல்கள், வெப்ப அலைகள், காட்டுத்தீ, வறட்சி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளையும் அத னால் ஏற்பட்ட உயிரிழப்பு, இடம்பெயர்வு, உணவுப் பாதுகாப்பின்மை, சுகாதார ஆபத்துகள், பொருளாதார  இழப்புகள் ஆகியவை குறித்தும் (WMO) அறிக்கை வெளியிட்டுள்ளது. வடக்கு அரைக்கோணப்பகுதியில், குறிப்பாக வட அமெரிக்கா, மத்திய தரைக்கடல், தெற்கு ஐரோப்பா,மோச்சா சூறாவளியால் பாதிக்கப் பட்ட இந்திய துணைக் கண்டம் மற்றும் நியூசிலாந்தில் இத்தகைய நிகழ்வுகள் நடந்ததாகவும் தெரிவிக்கிறது.  இந்த அறிக்கை, அதன் பல்வேறு, ஒன்றோடொன்று தொடர்புடைய பரிமாணங்களில் காலநிலை மாற்றம், அதன் மோசமான தாக்கங்கள் ஆகியவற்றையும் படம் பிடித்துக் காட்டுகிறது. துபாயில் காப் 228 (CoP228) மாநாட்டுக்குப் பிறகு ஒப்புக்கொள்ளப்பட்ட அறிவியல் தரவுகளின் கூட்டு விளைவுகளைப் பார்க்கையில் இவை எதுவும் ஆச்சரியமாகவில்லை. 2030 ஆம் ஆண்டு க்கு திட்டமிடப்பட்ட உலகளாவிய உமிழ்வுகளின் அள விற்கும், வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சி யஸ்க்குள் கட்டுப்படுத்துவதற்கும் இடையே உள்ள இடைவெளியை துபாய் மாநாட்டின் முடிவுகள் உணர்த்தின. இந்த ஆபத்தின் நுழைவாயிலில் உலகம் இன்று நிற்கிறது என்பதையே உலக வானிலை அமைப்பின் அறிக்கை எச்சரிக்கிறது. 

அனைத்து நாடுகளும் காப் 30 (COP 30)-இன் ஒப்புதலுக்காக 2025ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உமிழ்வுக் குறைப்பை லட்சியமாக வழங்க வேண்டும். ஏற்க வேண்டும். வளர்ந்த நாடுகள் கணிசமான உமிழ்வுக் குறைப்பை இலக்காகக் கொண்டுள்ளதாக உறுதி கூறுகின்றன. பொருளாதாரத்தின் அனைத்துப் பகுதிகளையும் தொடுகின்ற வகையில் உமிழ்வுக் குறைப்பை மேற்கொள்ள இந்தியாவிற்கும் உடன டியான அழுத்தமும், நெருக்கடியும் வரும். வளர்ச்சிய டைந்த நாடுகளுடன் அது கொண்டுள்ள சாதகமற்ற உறவுகளிலிருந்து இந்தியா உடனடியாக வெளியேற வேண்டும். அதற்கு பதிலாக, வளர்ந்த நாடுகளை, குறிப் பாக அமெரிக்காவை உமிழ்வை கணிசமாக பெரு மளவு குறைக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும். அமெரிக்கா உமிழ்வுகளை குறைத்திட வாக்குறுதி அளிக்கிறது. ஆனால் அதில் ஒரு சிறிய அளவேனும் அதை நிறைவேற்ற முன்வரவில்லை என்பதை நினை வில் நிறுத்த வேண்டும்.

பீப்பிள்ஸ் டெமாக்ரசி (21.4.24)
தமிழில் : கடலூர் சுகுமாரன்






 

;