districts

img

சித்தேரி மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வலியுறுத்தல்

தருமபுரி, ஜூலை 3- சித்தேரி மலைவாழ் மக்களுக்கு அடிப் படை வசதி செய்து கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் வலியு றுத்தி உள்ளது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சித்தேரி மலைகமிட்டி மாநாடு பாப்பிரெட்டிப் பட்டி வட்டம், சித்தேரி சமுதாயகூடத்தில் துணைத்தலைவர் லட்சுமணன்‌ தலைமை யில் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலா ளர் கே.என்.மல்லையன், துணைச்செயலா ளர் நாகராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். இம்மாநாட்டில், பழங்குடி உண்டு உறை விடப் பள்ளிகளில் 25 மாணவர்களுக்கு ஒரு  ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும். மேலும், ஆசிரியர்களுக்கு பள்ளியின் அருகே குடியிருப்பு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சித்தேரி மலை கிராம மக்களுக்கு சாலை, குடிநீர், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். 2006 வன உரிமைச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும். பழங்குடி மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க வேண்டும். வனநிலங் களை அனுபவம் செய்துவரும் மக்களுக்கு படட்டா வழங்க வேண்டும். பழங்குடி மக்க ளுக்கு அரசு வழங்கும் தொகுப்பு வீட்டிற்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் சித்தேரி மலைகமிட்டி தலைவராக கார்த்திக், செய லாளராக தேவேந்திரன், பொருளாளராக வெங் கட்ராமன் உட்பட 13 பேர் கொண்ட புதிய கமிட்டி தேர்வு செய்யப்பட்டது. இதில், ஏரா ளமானோர் கலந்து கொண்டனர்.

;