செவ்வாய், ஆகஸ்ட் 11, 2020

தமிழகம்

img

தாமிரபரணி தியாகிகள் நினைவு தினம்... மார்க்சிஸ்ட் கட்சி அஞ்சலி

திருநெல்வேலி:
ஊதிய உயர்வுக்காக போராடி காவல்துறையால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் 20ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நெல்லை தாமிரபரணி ஆற்றில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மலர் தூவி அஞ்சலி செலுத்தியது.கடந்த 1999ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தனர்.அப்போது அங்கு வந்த காவல்துறையினர், ஊர்வலமாக சென்று மனு கொடுக்க அனுமதிஇல்லை என்று கூறி, ஆயிரக்கணக் க்கான தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தினர். அந்த பகுதி வன்முறைக்களமாக காவல்துறையால் மாறியது. காவல்துறையால் தாக்குண்ட மக்கள் தாமிரபரணி ஆற்றின் மறுகரை நோக்கி செல்லும்போதும் விடாமல் துரத்தி, தண்ணீரில் வைத்து தொழிலா ளர்களை தாக்கி மூழ்கடித்தது. இதில் ஒன்றரை வயது குழந்தை உட்பட 17 பேரின் உயிர் பறிக்கப் பட்டது. தாமிரபரணி தியாகிகளின் நினைவாக ஆண்டுதோறும் சிபிஎம், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பல்வேறு தலித் அமைப்புகள் தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலிசெலுத்தி வருகின்றனர்.

செவ்வாய்கிழமை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் தலைமையில் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வீ.பழனி, பொ.ஜெய ராஜ், ஆர்.மோகன், உ.முத்து பாண்டியன், க.ஸ்ரீராம், எம்.சுடலைராஜ்,மாவட்டக் குழு உறுப்பினர்கள் பா.வரகுணன், எம்.வேல்முருகன், பி.உச்சிமாகாளி, தமிழ்நாடுதீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக் குழு உறுப்பினர்  பூ.கோபாலன், மாவட்டத்தலைவர் ஆர்.மதுபால்,காப்பீட்டு ஊழியர் சங்க  கோட்டபொது செயலாளர்  செ.முத்து குமாரசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமையில் ஆற்றில்மலர் தூவி அஞ்சலி செலுத்தப் பட்டது.

;