தமிழகம்

img

டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: ஆட்சியர்களுக்கு  தமிழக அரசு உத்தரவு

சென்னை:
வேகமாக பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மாவட்ட அளவில் குழுக்கள் அமைத்து இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பரவிவரும் டெங்கு காய்ச் சலை தடுக்க மேற்கொள்ளப்படும் முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் கணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், டெங்கு காய்ச்சலை கட்டுக்குள் கொண்டுவர நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி மற்றும் ஒன்றியங்கள் வாரியாக குழுக்கள் அமைத்து கண்காணிப்பு நடவடிக்கையிலும், கொசு ஒழிப்பு பணியிலும் ஈடுபடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.மேலும், பள்ளி மாணவர்களை தூய்மை தூதுவர்களாக நியமிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, டெங்கு காய்ச்சலை கட்டுக்குள் கொண்டுவர மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியாளர்களுக்கு தலைமைச் செயலாளர் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

;