அரசியல்

img

சந்தேகம் சாமிக்கண்ணு

யுனைடெட் வங்கி அறிவிப்பு :- மெஹுல் சோக்சி வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்.
ச.சா - இதுக்கே இவ்வளவு நாளா..??
*****
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான்:- வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது.
ச.சா - ஏறுனப்ப விலையெல்லாம் ஏறலன்னு சொன்னீங்களே..??
*****
செய்தி :- மொரிசியஸ் மருத்துவமனையைத் திறந்துவைத்தார் பிரதமர் மோடி.
ச.சா - மனசெல்லாம் வெளிநாட்டுல தான் இருக்கு..!!
*****
பாமக எம்.பி. அன்புமணி :- நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து சிபிஐ விசாரணை தேவை.
ச.சா - மருத்துவக்கல்லூரி துவக்குறதுல நடந்த ஊழல் வழக்கு உங்க மேல இருந்துச்சே.. முடிஞ்சுதா..??

;