எங்களை பற்றி

கம்யூனிஸ்ட் இயக்கத்தின் எந்தவொரு ஏடும் தனக்கென்று ஒரு வரலாற்றுப் பின்னணியை அவசியம் கொண்டிருக்கும். மாமேதை லெனின் துவக்கிய ‘இஸ்க்ரா’ (தீப்பொறி) ஏட்டிலிருந்து இது தொடங்குகிறது. தொழிலாளி வர்க்க இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லவும், அந்த வர்க்க இயக்கத்துள் புகுந்துள்ள சீர்திருத்தவாத. சீர்குலைவுத் தன்மை பொருந்திய கருந்தோட்டத்தை எதிர்த்துப்போராடி முறியடித்து தொழிலாளி வர்க்க இயக்கத்தை புரட்சிகரப் பாதையில் கொண்டு செல்வதையும் இத்தகைய கம்யூனிஸ்ட் ஏடுகள் தங்ளுக்கென்று பெருமை மிகு பின்னணியாகக் கொண்டுள்ளன.

‘தீக்கதிர்’ ஏடும் அத்தகையதொரு பின்னணியில் மிளிர்ந்த ஏடு என்பதை பெருமையுடன் கூறலாம்.

1962-63ம் ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தத்துவாhத்தப் போராட்டம் கூர்மையடைந்திருந்த நிலையில், 1962ம் வருடத்திய இந்திய – சீன எல்லை மோதலைத் தொடர்ந்து கட்சியின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைவர்களும், ஊழியர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில் தீக்கதிர் ஏடு தோன்றியது.

எஸ்.ஏ. டாங்கே தலைமையிலிருந்த கட்சியின் மத்தியத் தலைமையும். மணலி கந்தசாமி தலைமையிலிருந்து மாநிலத் தலைமையும் காங்கிரசுடன் கூட்டு சேர வேண்டும். முதலாளி வர்க்கத்தின் தொங்கு சதையாக இந்தியத் தொழிலாளி வர்க்கத்தை மாற்ற வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டிருந்த நேரத்தில் அதற்கெதிராகப் போராடுவதற்காகத் தோன்றியது தீக்கதிர் ஏடு.

பங்கேற்றோர்

தீக்கதிர் ஏட்டைத் தொடங்குவதில் முக்கியப் பங்காற்றியவர் தோழர் எல். அப்பு என்ற அற்புதசாமியே ஆவார். 101 உறுப்பினர்கள் கொண்ட கட்சியின் தமிழ் மாநில கவுன்சில் உறுப்பினர்களுள் ஒருவரான அவர், கோவை மாவட்டத்தில் பிரபல தொழிற்சங்கத் தலைவர்களுள் ஒருவருமாவார், சிறையிலிருந்த தலைவர்களுடன் பேட்டிகண்டு பேசிய பின் இத்தகையதொரு ஏட்டைத் தொடங்குவதென்று முடிவு செய்யப்பட்டது. தோழர் அப்பு கோவை மாவட்டத் தொழிலாளிகளிடம் வசூல் செய்த பணத்தைக் கொண்டு தீக்கதிர் வார ஏட்டின் முதல் இதழ் 1963ம் ஆண்டு ஜூன் மாதம் 26ம் தேதி அவரை ஆசிரியராகக் கொண்டு வெளியானது. கோவைத் தொழிலாளி வர்க்கம் கொடுத்த செந்தீக்கதிரை உயர்த்திப் பிடித்திடுவோம் என்ற வாசகங்களை தீக்கதிர் இதழில் காணலாம்.

தீக்கதிர் உருவாக்கத்திற்கு பெரிதும் வழிகாட்டியதோடு, தமிழகம் முழுவதிலும் அதற்கு முகவர்களை தேடிப்பிடித்து விற்பனைக்கு ஏற்பாடு செய்தவர் தோழர் ஆர்.ராமராஜ் அவர்களே ஆவார். கட்சியின் மாநிலக்கவுன்சில் உறுப்பினராகயிருந்த அவர், அவ்வாண்டு மே மாதத்தில் சிறையிலிருந்து விடுதலையாகியிருந்தார். தீக்கதிருக்கு தோழர் அப்பு ஆசிரியராக இருந்த போதிலும் அந்தப் பணியைச் செய்தவர் தோழர் சோலையே ஆவார். ‘கட்சி விரோத’ செய்தியை ஜனசக்தியில் வெளியிட்டார் என்பதற்காக அவர் அதன் ஆசிரியர் குழுவிலிருந்து அப்பொழுது டிஸ்மிஸ் செய்யப்பட்டிருந்தார். தீக்கதிர் உருவாக்கத்திற்கு பெரிதும் பாடுபட்டவர்களில் மற்றொருவர் nத்hழர் எம்.என். ராவுண்ணி. அவர் மின்சார தொழிலாளர் சங்கத்தின் ஊழியர்களில் ஒருவராக இருந்தார். கட்சி உறுப்பினரும் ஆவார்.

தீக்கதிரின் முதல் அலுவலகம் சென்னை கோடம்பாக்கம் பகுதியில் உள்ள் ஆண்டவர் நகர் என்ற இடத்தில் கட்டிடம் ஒன்றின் முதல் மாடியில் உள்ள ஒரு அறையில் அமைக்கப்பட்டது.

தீக்கதிர் வெளிவருவதற்கு பின்னின்று உதவியவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் கட்சியின் தின இதழான ஜனசக்தியில் பணியாற்றிக்கொண்டே தீக்கதிருக்கும் உதவிய தோழர்கள் டி.எஸ்.தினகரன், சூரியநாராயணன், வி.கே.பாலகிருஷ்ணன், என். ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒரு பிரிவினர். இவர்களில் முதல் மூவரும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள். நான்காமவர் கட்சி அனுதாபி.

மற்றொரு பிரவினர் தமிழரசுக் காழகத்தில் முக்கியத் தலைவர்களாக இருந்தவர்களும். இடதுசாரி மனோபாவம் கொண்டிருந்தவர்களும், கம்யூனிஸ்ட் இயக்கத்தை நோக்கி வந்துகொண்டிருந்தவர்களும், இடதுசாரி மனோபாவம் கொண்டிருந்தவர்களும், கம்யூனிஸ்ட் இயக்கத்தை நோக்கி வந்துகொண்டிருந்தவர்களுமான உசிலை த.சோமனாதன், கோவை ஈஸ்வரன், அந்தக் கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர் வே.நாகராஜன் ஆகியோர் ஆவர். இது தவிர வங்கி ஊhழிராயிருந்த வேதா என்ற வேதாந்த தேசிகனும் பல கட்டுரைகள் எழுதி உதவினார்.

கேட்டதும், கிடைத்ததும்

இந்த புதிய பத்திரிகைக்கு ‘தீப்பொறி’ என்ற பெயர்தான் கேட்கப்பட்டது. ஆனால், திமுக தலைவர்களுள் ஒருவரான சி.பி.சிற்றரசு அந்தப் பெயரில் ஒரு பத்திரிகையை ஏற்கெனவே நடத்தி நிறுத்திவிட்ட போதிலும் அந்தப் பெயர் அவரிடமே இருந்துவிட்டது. எனவேதான் இரண்டாவதாகக் கேட்கப்பட்ட ‘தீக்கதிர்’ என்ற பெயர் கிடைத்தது. இதுவும் கிடைத்திருக்கவில்லையென்றால் மூன்றாவதாகக் கேட்ட ‘தீச்சுடர்’ என்ற பெயர்தான் கிடைத்திருக்கும்.

தீக்கதிரை அச்சிட்டுத்தர பல அச்சகத்தார் தயங்கினர் இறுதியில் தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் டிரெடில் மிஷின் ஒன்றை வைத்து ‘மொழியரசி அச்சகம்’ என்ற பெயரில் சிறிய அச்சகம் ஒன்றை நடத்தி வந்த புலவர் வே.புகழேந்தி அதை அச்சிட்டுத்தர முன் வந்தார். அவர் வேலையில்லாத் தமிழாசிரியர். தமிழ் தேசீயக் கட்சியைத் சார்ந்தவர். அவர் வைத்திருந்த டிரெடில் இயந்திரம் கூட மின்சாரத்தால் இயங்குவதல்ல. காலில் மிதித்துத்தான் அதில் அச்சிட வேண்டிருக்கும், சிரமப்பட்டு ஒவ்வொரு பக்கமாக அச்சிடுவார். சில சமயங்களில் எங்களில் ஒருவர் டிரெடில் மிஷினுக்குப் பின்புறம் நின்று கொண்டு அதை தள்ளிக்கொண்டு இருப்போம். புகழேந்தி பத்திரிகையை சொருகி எடுப்பார்! சரியான கொள்கைக்காகப் போராடுகிறோம் என்ற உணர்வு எத்தகைய இடர்பாடுகளையும் சந்திக்கும் திறனை அளித்தது என்றால் அது மிகையில்ல.

தீக்கதிர் துவங்கிய முதல் மூன்று மாதங்களுக்கு கட்டுரைகள் பெரும்பாலும் சோலை, உசிலை சோமனாதன். கோவை ஈஸ்வரன், வேதா ஆகியோரால் எழுதப்பட்டன. சோலையும். கோவை எஸ்வரனும் ஆங்கிலக் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து தருவார். பத்திரிகையை வெளியிட தேவைப்படும பணத்தை திரட்டிக் கொண்டு தோழர் அப்பு அடிக்கடி சென்னைக்கு வந்து போவார். இதர மாவட்டங்களிலிருந்து தோழர் ஆர். ராமராஜ் அவர்கள் பணம் வசூலித்து சென்னைக்கு கொண்டுவந்து கொடுத்துவிட்டு அந்தந்த வாரத்தில் நடக்கும் விவரங்களை nக்டடு அறிந்துபோவார். ஆரம்பக் கட்டத்தில் கோவை மாவட்டத்தில்தான் பிரதிகள் அதிகம் விற்பனையாயின. 4 பக்கம் கொண்ட பத்திரிகை விலை 10 பைசா, சில சமயங்களில் பத்திரிகை காகிதம் வாங்குவதற்குக்கூட மிகவும் சிரமம் ஏற்பட்டதுண்டு. ஓரிருமுறை உசிலை சோமனாதன் தன் கைக்கடிகாரத்தை அடகுவைத்து கூட பணம் வாங்கிக் கொடுத்திருக்கிறார். எம்.என்.ராவுண்ணியும் பலரிடம் கடன் வாங்கி உதவினார்.

பிரதான பணி

பத்திரிகைக்கு கட்சி அணிகளிடமிருந்து நல்ல வரவேற்பு இருந்தது. தொழிலாளிகள் பலர் கவிதைகள் எழுதி அனுப்பினர். இவை தொழிலாளிகள் எழுதிய கவிதைகள், இலக்கணத்தை தேடாதீர்கள். தொழிலாளிகளின் இதயத்தைத் தேடுங்கள் என்ற அறிமுகத்துடன் அவை பிரசுரமாயின.

 

அவற்றில் ஒன்று:

‘எதுவரினும் அஞ்சாதே! ஏற்றமுடனே எழுது

மதுவண்டு போல் நீயும் மக்களுடன் உறவாடு

கதி இல்லை என்போர்க்கு காட்டுவழி தீக்கதிரே

நதி கடலில் கூடுதல்போல் நாடே உன்திசைகூடும்!’

 

பாவலர் வரதராசன் எழுதிய கவிதை ஒன்று தெருப்பாடகன் என்ற பெயரில் தீக்கதிரில் வெளியானது.

துவக்கத்தில் தீக்கதிரின் பணி பின்வருமாறு இருந்தது: டாங்கே – மணலி கந்தசாமி தலைமையின் வர்க்கச் சமரசக் கொள்கைகளை அம்பலப்படுத்துவது. வர்க்கப் போராட்டப் பாதையை சுட்டிக்காட்டுவது. சிறையிலடைக்கப்பட்டுள்ள தலைவர்களின் விடுதலைக்காகப் போராடுவது என்பதாகவே இருந்தது.

‘பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நான் ஏன் ராஜினாமா செய்தேன்’ என்ற தோழர் இ.எம்.எஸ். நம்பூதிபாட்டின் அறிக்கை, ‘சிறைக்கதவுகள் திறக்கட்டும், சிங்க ஏறுகள் வெளியேறட்டும்’ என்ற தலைப்பில் தோழர் ஏ.கே.கோபாலன் ஏழுதிய கட்டுரை ‘கண்ணீர் வடிக்கும் தொழிலாளி வர்க்கமே நாடாளுமன்றம் நோக்கி அணிதிரள்க’ போன்ற கட்டுரைகளை இங்கே குறிப்பிட்டுச் சொல்லலாம்.

மாற்றுபெயரில் கட்டுரைகள்

செப்டம்பர் மாத இறுதியில் சிறையிலிருந்த தலைவர்கள் அனைவரும் விடுதலையாயியனர். அதே சமயத்தில் தோழர் சோலை, புதிதாகத் துவங்கப் பட்டிருந்த ‘நவமணி’ நாளேட்டில் உதவி ஆசிரியராக சேர்ந்துவிட்டார். அத்துடன் அவருக்கம் தீக்கதிருக்குமிருந்த தொடர்பு படிப்படியாகக் குறைந்து விட்டது.

தலைவர்கள் விடுதலையான பின், கட்சிக்குள் கருத்துப் போராட்டம் தீவிரமடையத் தொடங்கியது. கட்சியின் ஆதிக்கத் தலைமை, தீக்கதிருக்கெதிராக அவதூறுப் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டது. தீக்கதிரை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று தோழர் எல். அப்புவுக்கு கட்டளையிட்டது. கட்சியின் மாநில கவுன்சில் கூட்டம் ஒவ்வொன்றும் கருத்துப் போராட்டக் களமாக மாறியது.

தலைவர்கள் விடுதலையான பின் அவர்கள் தீக்கதிரில் பல கட்டுரைகள் எழுதினர். பி.ராமமூர்த்தியின் கட்டுரைகள் ‘மார்க்சீயவாதி’ என்ற பெயரிலும் என். சங்கரய்யா எழுதிய கட்டுரைகள் ‘கம்யூனிஸ்ட்’ என்ற பெயரிலும், வி.பி.சிந்தன் எழுதிய கட்டுரைகள் ‘பி.தேவராஜ்’ என்ற பெயரிலும் ஏ.பாலசுப்ரமணியம் எழுதிய கட்டுரைகள் ‘மேகநாதன்’ என்ற பெயரிலும் வெளியிடப்பட்டன. கே.முத்தையா எழுதிய குறிப்புகள் பெயரிடப்படாமல் வெளியாயின. தலையங்கம் எழுதுவது உள்ளிட்ட பத்திரிகையின் உள்ளடக்கத்திற்கு என்.சங்கரய்யா வழிகாட்டினார். நிர்வாகத்தை நடத்துவதற்கு வி.பி.சிந்தன் வழிகட்டினார்.

இச்சமயத்தில் தீக்கதிர் சைதாப்பேட்டையிலிருந்த கீதா அச்சகத்தில் சிலிண்டர் மிஷினில் அச்சிடப்படத் துவங்கியது. சத்திய நாராயணன் என்பவருடைய அச்சகம் அது. அப்போது தீக்கதிரின் பக்கங்களும், விலையும் அதிகரிக்கப்பட்டது. சைதாப்பேட்டை வேலைவாய்ப்பு அலுவலகம் உள்ள வளாகத்தில் ஒரு சிறிய அறை தீக்கதிர் அலுவலகமாக செயல்பட்டுவந்தது.

மிரட்டலும் மாற்று ஏற்பாடும்

பத்திரிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று கட்சித் தலைமை அப்புவுக்கு கட்டளையிட்டதால் வேறொரு ஏற்பாடு செய்யப்படவேண்டியிருந்தது. உட்கட்சிப் போராட்டம் முற்றிப்போய் வெடிப்பை எதிர்நோக்கியிருந்த நேரத்தில் அதை நிறுத்துவதென்பது கனவிலும் நினைக்க முடியாத காரியம். எனவே, தலைவர்கள் அது குறித்து விவாதித்து பத்திரிகையின் நிர்வாகத்தை நடத்திவந்த எம்.என்.ராவுண்ணியை ஆசிரியராகக் கொண்டு அதை வெளியிட முடிவு செய்தனர். இதுவும் பெயரளவு ஏற்பாடுதான். நவம்பர் 30ம் தேதிய இதழிலிருந்து ஆசிரியர் எம்.என்.ராவுண்ணி என்ற பெயரில் தீக்கதிர் வெளிவரத் துவங்கியது.

இதைக்கண்டு மேலும் ஆத்திரமடைந்த மணலி கந்தசாமி தலைமை கட்சி விதியை மீறினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், எல். அப்புவை கட்சியிலிருந்து நீக்கியது.

1964ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் வ்hரத்தில் கட்சியின் தமிழ் மாநில கவுன்சில் கும்பகோணம் நகரில் கூடிய பொழுது கருத்து வேறுபாடு வலுத்து பி.ராமமூர்த்தி உள்ளிட்ட 29 மாநிலக்குழு உறுப்பினர்கள் கொடுத்த மாற்றுத் தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. எனவே வேறு வழியின்றி பி.ஆரும் இதர தோழர்களும் கவுன்சில் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அதே ஏப்ரல் மாதக் கடைசியில் டில்லியில் கூடிய தேசியக் கவுன்சிலிலும் கருத்து மோதல் உருவாகி பி.சங்கரய்யா, இ.எம்.எஸ்., ஜோதிபாசு, பி.ராமமூர்த்தி, சுர்ஜித் உள்ளிட்டு 32 தேசியக் கவுன்சில் உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். மாhக்சிய -லெனினிய தத்துவத்தின் புரட்சிகரத் தன்மையைப் பாதுகாக்க மாhக்சிஸ்ட் கட்சி உருவானது.

மணியார்டரும், மதியச் சாப்பாடும்

புதிதாக உருவான கட்சிக்கு அலுவலகம் அமைக்க பல மாதங்கள் வரை இடம் கிடைக்கவில்லை. எனவே தலைவர்கள் வீடுகளுக்குப் போய் கட்டுரைகள், தலையங்கம் வாங்கி வருவது போன்ற வேலைகளை என்.ராமசிருஷ்ணன் செய்வதுண்டு. இயக்கச் செய்திகள் எழுதுவது,. புரூப் திருத்துவது போன்ற வேலைகளை கோவை ஈஸ்வரனும் என். ராமகிருஷ்ணனும் செய்வதுண்டு. பத்திரிகை நிர்வாகத்தை நடத்துவது முழுவதும் ராவுண்ணியைச் சேர்ந்தது. ஏஜேண்டுகள், சந்தா கணக்குகளை ராவுண்ணியும், சூரிய நாராயணனும் செய்வதுண்டு. கட்சியில் உடைப்பு ஏற்பட்டபின் தீக்கதிர் விற்பனை அதிகரித்தது. ஆனால் அதிலிருந்து வரும் வருமானம் பல ஊழியர்களை பராமரிக்கப் போதுமானதாக இல்லை. யாருக்கும் மாத ஊதியம் என்று கிடையாது. சாப்பாட்டுச் செலவு, போக்குவரத்துச் செலவு என்ற அளவுக்கு மட்டும்தான் சமாளிக்க முடிந்தது. மாதத்தின் முதல் பாதியில் நிலைமை ஒருவாறு சமாளிக்கப்பட்டுவிடும். பிற்பகுதியில் மிகவும் சிரமமாக இருக்கும். ஏஜெண்டுகளிடமிருந்து ‘மணியார்டர் வந்தால்தான் மதியச் சாப்பாடு’ என்ற நிலைமை பல நாட்கள் இருந்தது. பல வாரங்களில் பத்திரிகை காகிதம் வாங்குவதற்குக் கூடப் பணம் இல்லாமல் சிரமப்பட்டதுண்டு. பத்திரிகைக்குப் பொறுப்பாயிருந்த வி.பி.சிந்தனிடம் போய் நிற்போம். அவரிடமும் பணம் இருக்காது. முண்டும் மாலையில் அவர் முன் போய் நிற்போம். யாரிடமிருந்தாவது வாங்கி தயாராக வைத்துள்ள பணத்தை டைரியிலிருந்து எடுத்துக் கொடுப்பார்.

வியாழன் இரவிலிருந்து பத்திரிகையை மடிப்பது போன்ற வேலைகள் தொடங்கும். வெள்ளிக்கிழமை மாலைக்குள் சந்தாதாரர்களுக்கும், ஏஜெண்டுகளுக்கும் அனுப்பப்பட்டுவிடும்ள. சில சமயங்களில் தபால் தலை வாங்கவும், ரயில் பார்சல் கட்டணத்திற்கும்கூடப் பணம் கிடைக்காமல சிரமப்பட்டதுண்டு. ஆனால் ராவுண்ணி தன் நண்பர்கள், தோழர்கள் யாhடமிருந்தாவது கடன் வாங்கி வந்து பத்திரிகையை தவறாமல் அனுப்ப ஏற்பாடு செய்துவிடுவார்.

அதிகாரப்பூர்வ ஏடாகிறது.

கட்சி இடைந்தபின் ஏப்ரல் 28, 29 தேதிகளில் தமிழ் மாநில கம்யூனிஸ்ட் இணைப்புக்குழுக் வட்டம் மதுரை நகரில் நடைபெற்றது. அது தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமனை அமைப்பாளராகக் கொண்ட 16 உறுப்பினர் நிர்வாகக் குழுவைத் தேர்ந்தெடுத்தது. இணைப்புக் குழுவின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 12,13 தேதிகளில் திருச்சியில் கூடியது. அது தீக்கதிர் பத்திரிகையின் ஆசிரியராக தோழர் என்.சங்கரய்யாவைத் தேர்ந்தெடுததது. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 6ம்i தேதிய இதழிலிருந்து ‘தீக்கதிர்’ என்.சங்கரய்யாவை ஆசிரியராகக் கொண்டு ‘கம்யூனிஸ்ட் வார ஏடு’ எடனற ,,குடிறடபபிமடன வெடிளியாகத்துவங்கியது.

இதேசமயத்தில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு தலைமையகம் அமைக்க ஒரு இடம் மிகுந்த சிரமத்திற்குப் பின் கிடைத்தது. மார்க்சிஸ்ட் கட்சியினர் ‘சீன ஏஜெண்டுகள்’ என்ற அவதூறுப் பிரச்hரம் கட்டவிழித்துவிடப்ட்டதால் வாடகைக்கு இடம் தர யாரும் தயாராயில்லை. இறுதியில் திருவல்லிக்கேணி டாக்டர் நடேசன் சாலையிலிருந்த 153 எண்ணுள்ள கட்டிடத்தின் மாடி வாடகைக்கு கிடைத்தது. கீழ்ப்பகுதியிலிருந்த வீட்டுக்காரர் ராஜேஷ் என்பவர் ‘டைம்ஸ் அச்சகம்’ என்ற பெயரில் ஒரு டிரெடில் மிஷினை வைத்துக்கொண்டு சினிமா பத்திரிகை ஒன்றை பெயரளவுக்கு நடத்தி வந்தார்.

புதிதாக உருவெடுத்துள்ள புரட்சிகரக் கட்சியை முடக்கிவிட வேடுமென்றறு திட்ம் தீட்டிய லால்பகதூர் சாஸ்திரியின் அரசாங்கம் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதியன்று இந்தியா முழுவதிலும் கைது செய்யும் படலத்தை துவங்கியது. 1000க்கும் மேற்பட்ட தலைவர்களும், ஊழியர்களும் இந்திய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்ப்பட்டு சிறையில்டைக்கப்பட்டனர். தமிழகத்தில் 100க்கும் மேற்பட்ட தேழர்கள் கைது செய்யப்பட்டனர். அதுமட்டுமல்ல, தீக்கதிரை அச்சிட்டுத்ததந்த கீதா அச்சக உரிமையாளர் சத்தியநாராயணனும் கைது செய்ப்பட்டார்.

சிறைப்படுத்தப்பட்டவர்கள் 13 மாத காலத்திற்குப் பின், 1966ம்ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விடுதலை செய்யப்பட்லாயினர். 16 மாதகாலத்திற்குப்பின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் விடுதலையாயினர்.

தனக்கென்று அச்சகம்

1967ம் ஆண்டு பொதுத் தேர்தல் வரவிருந்தது. கட்சியின் நடவடிக்கைள் விரிவுபடுத்தப்படலாயின. எனவே, மாநிலக் குழு அலுவலகத்திற்கு அதிக இடம் தேவைப்ட்டது. எனவே டாக்டர் நடேசன் சாலை கட்டிடத்தின் கீழ்ப்பகுதியையும் வாடகைக்கு தரவேண்டும். இல்லையென்றாஙர அவறு இடத்திற்க அலுவலகத்தை மாற்றிக் கொள்வதாக கட்சித் தலைமை, வீட்டு உரிமையாளரிடம் கூறியது. அவர் கீழ்ப்பகுதியை காலி செய்ய சம்மதித்தார். ஆனால் தன்னிடமுள்ள டிரெடில் இயந்திரத்தையும், அச்சு எழுத்துக்களையும், கட்சி வாங்கிக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். கட்சித் தலைமை அதற்குச் சம்மதித்து அந்த டிரெடில் இயந்திரத்திற்கும், அச்சுக்களுக்கும் ஒரு விலை நிச்சயித்து வாங்கிக்கொண்டது. அதைத் தொடர்ந்து ஒரு பழைய சிலிண்டர் இயந்திரமும் வாங்கப்பட்டது. ‘தீக்கதிர்’ அதில் அச்சிடப்படத்துவங்கியது. இவைதான் ‘தீக்கதிர்’ நாளிதழின் ஆரம்பச் சொத்துக்கள். அப்பொழுதிலிருந்து ‘தீக்கதிர்’ தோழர கே.முத்தையாவின் பொறுப்பின் கீழ் வெளிவரத் தொடங்கியது.

1969ம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமையகம் மதுரைக்கு மாற்றப்ட்டது. எனவே, தீக்கதிரும் மதுரையிலிருந்து வெளிவரத் தொடங்கியது. மதுரை வடக்குச்சித்திரை வீதி முதலாம் சந்திலிருந்த வாடகைக்கு ட்டிடம் ஒன்றின் மாடியில் கட்சி அலுவலகமும், கீழ் பகுதியில் தீக்கதிர் அலுவலகமும் செயல்படத் தொடங்கின.

கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபடுவதற்க முன்னர் ‘ஜனசக்தி’ மதுரை பதிப்பை வெளியிடுவதற்காக உருவாக்கப்பட்ட கட்டிடம் பைபாஸ் சாலையிலிருந்தது. கட்சி புளவுபட்டபின் அதை விற்பதற்காக மணலி கந்தசாமி தலைமை முயற்சித்தது. ஆனால் முடியவில்லை. இறுதியில் பெரும் முயற்சிக்குப் பின்னர் 1973ம் ஆண்டில் அந்தக் கட்டிடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விலைக்கு வாங்கி விரிவாக்கம் செய்தது.

அவ்வாண்டு நவம்பர் 7ம் தேதியன்று கட்டிடத்தை தோழர் பி.ராமமூர்த்தி திறந்துவை அதுமுதல், தீக்கதிர். அந்தக் கட்டிடத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கின்றது. ‘தீக்கதிர் ஏடும்’ ‘தீக்கதிர்’ அச்சகமும் உதயமும்! வரலாறு இதுதான்.