img

‘சேற்றில்தான் தாமரை மலரும்’– பால்தாக்கரே பேரன் கிண்டல்!

மும்பை:
சேற்றில்தான் தாமரை மலரும் என்றுசிவசேனா கட்சியின் இளம் தலைவர் ஆதித்யா தாக்கரே பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். ஓர்லி தொகுதி எம்எல்ஏ-வான அவர் தனது முதல் சட்டமன்ற உரையில் இவ்வாறு அதிரடியாக பேசியுள்ளார்.“மகாராஷ்டிராவில் புதிய அரசு ஏற்படுத்தப்படுவதற்கு முன்பாக ஒரு மாதம்அரசியல் நாடகம் நடந்தது. கூட்டணி கட்சிகளுக்கு கடும் தொந்தரவுகள் கொடுக்கப்பட்டன. இருப்பினும், பால்தாக்கரேவின் மகனும் முதல்வருமான உத்தவ் தாக்கரே, சரத்பவார், சோனியா காந்தி ஆகியோர் இந்த ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும் என முடிவுசெய்தனர். இது மகாராஷ்டிராவின் வலிமையை காட்டுகிறது. மக்கள் சொல்வதைப் போல தாமரை என்பது சேற்றில்தான் மலரும். அதுதான் நடந்திருக்கிறது. இந்தகூட்டணி எதிர்வரும் உள்ளாட்சி தேர்த லிலும் பாஜகவுக்கு வெற்றி கிடைக்கவிடாமல்செய்ய வேண்டும்” என்று ஆதித்யதாக்கரே கூறியுள்ளார்.மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி ஆட்சியை நடத்தி வருகின்றன. இந்தமுறை சட்டமன்றத்திற்கு சிவசேனாவின் ஆதித்யா தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் பேரன் ரோஹித்பவார், அதிதி தாக்கரே உள்ளிட் டோர் முதன்முறையாக தேர்வு செய்யப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;