img

ஊழியர்களை ராஜினாமா செய்யச் சொல்லும் காக்னிசண்ட்... ஆபத்தில் 18 ஆயிரம் பேரின் வேலை!

பெங்களூரு:
பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட், தனது பெங்களூரு, சென்னை கிளைகளில் பணியாற்றும் 18 ஆயிரம் ஊழியர்களின் வேலையைப் பறித்து, வீட்டுக்கு அனுப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது.அமெரிக்காவின் பிரபல ஐடி நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனத்தின் சென்னை மற்றும் பெங்களூரு கிளைகளில் கடந்த 2 இரண்டு மாதங்களாக லே ஆப் (lay off) செய்துள்ளது. இங்கு பணியாற்றிவந்த சுமார் 18000 ஊழியர்கள் பணி ஏதும் அளிக்கப்படாமலேயே வைக்கப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் புதிய ஆர்டர்கள் வராமல் கம்பெனியை நடத்துவது கஷ்டம் என்றும், ஊழியர்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விடுமாறும் காக்னிசண்ட் கூறியுள்ளது.இது ஊழியர்களுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.  காக்னிசண்ட்டின் முடிவுக்கு கர்நாடக மாநில ஐடி ஊழியர் தொழிற்சங்கம் (Karnataka State IT/ITeS Employees Union - KITU) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.“தொழிலாளர் நலச் சட்டத்தின்படி 100-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிக்கு அமர்த்தி உள்ள நிறுவனங்கள் ‘லே ஆப்’ அளிக்க வேண்டுமானால், தொழிலாளர் நலத்துறையின் ஒப்புதல் பெற வேண்டும். எனவே, அவ்வாறு செய்யாமல் “எங்கள் ஊழியர்கள் அவர்களாகவே முன்வந்து ராஜினாமா செய்த விட்டனர்” என்று காட்டுவதற்கான முயற்சியில் காக்னிசண்ட் இறங்கியுள்ளது. அதற்காகவே, மறைமுகமாக ராஜினாமா செய்யச் சொல்லி, ஊழியர்களை வற்புறுத்தி வருகிறது” என்று ஐடி ஊழியர் தொழிற்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

“காக்னிசண்ட் நிறுவன ஊழியர்கள் யாரும் தாங்களாக முன்வந்து ராஜினாமா செய்யக்கூடாது” என்ற இயக்கத்தையும் துவங்கியுள்ள தொழிற்சங்கம், காக்னிசண்ட் முயற்சி குறித்து, தொழிலாளர் நலத்துறைக்கும் புகார் அளித்துள்ளது.

;