india

img

உச்சநீதிமன்றத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டுமாம்...

புதுதில்லி:
உச்சநீதிமன்றத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.மறைந்த பிரபல மத்தியஸ்தர் பி.பி.ராவின் கட்டுரைகள் அடங்கிய புத்தக வெளியீட்டு விழா, தில்லியில் வெள்ளியன்று நடைப்பெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதி நாரிமன், அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் மற்றும் முன்னாள் நீதிபதிகள் கலந்து கொண்ட - இந்த விழாவிலேயே, வெங்கையா நாயுடு, மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் பேசியிருப்பதாவது:
உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றைஉடனடியாக முடிப்பது அவசியம் ஆகும். அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள் ளது. இந்த வழக்குகளில் அரசியலமைப்புச் சட்ட விவகாரம் உட்பட பல்வேறு முக்கிய வழக்குகளும் இடம்பெற்றுள்ளன. எனவே, இந்த வழக்குகளை விசாரித்து முடிக்க, உச்ச நீதிமன்றம் இரண்டாகப் பிரிக்கப்பட வேண்டும். ஒரு பிரிவு அரசியலமைப்புச் சட்டவழக்குகளையும், மற்றொரு பிரிவு மேல்முறையீட்டு வழக்குகளையும் விசாரிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, நாட்டின் நான்கு பகுதிகளிலும் உச்ச நீதிமன்றக் கிளைகள் திறக்கப்பட வேண்டும். இந்த கிளைகள்- வடக்குப் பகுதிக்கு தில்லியிலும், தெற்குப் பகுதிக்கு சென்னை அல்லது ஹைதராபாத்திலும், கிழக்குப் பகுதிக்கு கொல் கத்தாவிலும், மேற்குப் பகுதிக்கு மும்பையிலும் அமையலாம். இவ்வாறு வெங்கையா நாயுடு பேசியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தை பல கிளைகளாக பிரிக்க வேண்டும் என்பது பாஜகவின் திட்டங்களில் ஒன்றாகும். வலுவான ஒற்றை உச்சநீதிமன்றம் இருப்பது, தங்களின் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு, தடையை ஏற்படுத்தலாம் என்பதால், உச்ச நீதிமன்ற நிர்வாகத்தை இரண்டாக, மூன்றாக பிரித்து, அதன் அதிகாரத்தை குலைக்கும் முயற்சியாகவே இந்த திட்டத்தை கையில் வைத்துள்ளது. ஆனால், மோடிஅரசின் பரிந்துரையை, உச்ச நீதிமன் றம் ஏற்கெனவே நிராகரித்து விட்டது.
இந்நிலையில்தான், உச்ச நீதிமன்றத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற பாஜக-வின் திட்டத்தை குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையாநாயுடு, மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

;