india

img

கொரோனா வைரஸ் மருந்து 6 மாதங்களில் சந்தைக்கு வரும்... ‘சிப்லா’ மருந்து தயாரிப்பு நிறுவனம் தகவல்

புதுதில்லி:
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து அடுத்த ஆறு மாதங்களில் சந்தைக்கு கொண்டு வரப்படும் என்று மருந்து தயாரிப்பு நிறுவனமான ‘சிப்லா’ தெரிவித்துள்ளது. 

மருந்தின் ஏபிஐ (Active Pharma Ingredidnts - APIs) தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை தற்போது எடுத்து வருவதாகவும் சிப்லா கூறியுள்ளது.உடல்நலப் பிரச்சனைகளுக்கு, குறிப்பாக சுவாசப் பிரச்சனைகள் மற்றும் காய்ச்சலுக்கான மருந்துகளை தயாரித்து வரும் இந்திய மருந்து நிறுவனம் ‘சிப்லா’ (Cipla) ஆகும். இந்நிலையில்தான், சிஎஸ்ஐஆர் ஐஐசிடி உள்ளிட்ட அரசு ஆய்வகங்களுடன் இணைந்து கொரோனா மருந்துகளை உருவாக்குவதுடன், சுவாசப் பிரச்சனைகள், ஆஸ்துமா, வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் எச்.ஐ.வி. மருந்துகளின் பயன்பாடு குறித்து ஆராய்ச்சி செய்துவருவதாகவும், 6 மாதங்களுக்குள் கெரோனா மருந்தை சந்தைக்கு கொண்டு வருவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.அவ்வாறு நடக்கும் பட்சத்தில், கொரோனா வைரஸூக்கு மருந்து கண்டுபிடித்த முதல் நிறுவனமாக இந்தியாவைச் சேர்ந்த ‘சிப்லா’ இருக்கும்.“எங்களுடைய அனைத்து வளங்களையும் நாட்டின் நலனுக்காக அள்ளிக் கொடுப்பதை தேசிய கடமையாக நாங்கள் கருதுகிறோம்” என்று சிப்லா நிறுவன சேர்மன் யூசுப் ஹமீத் கூறியுள்ளார்.

;