headlines

img

அரசே சீர்குலைக்கலாமா?

 இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 25 விழுக்காடு ஒதுக்கீட்டில் தனியார் பள்ளி களில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கான கல்வி கட்டணச் செலவை அரசு அதிரடியாக குறைத்துள்ளதால் மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். கடந்த 2009ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் சுயநிதி பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கையின் போது, சமூகத்தில் பின்தங்கிய, ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தை கள் 25 சதவீதம் சேர்க்கப்பட வேண்டும். அதற் கான செலவினத்தை அரசே செலுத்தும்.  இதையடுத்து கடந்த 2011ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் 25 விழுக் காடு அடிப்படையில், சுமார் 1 லட்சம் குழந்தை கள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அப்படி சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு அரசின் சார்பில் செலவினத் தொகை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணம் அல்லது அரசுப் பள்ளியில் படிக்கும் ஒரு மாண வருக்கு செலவிடும் தொகை ஆகியவற்றில் எது குறைவோ, அந்த தொகையை தனியார் பள்ளிக ளுக்கு அரசு ஒதுக்கி வருகிறது. இந்நிலையில், அந்த செலவுத் தொகையை குறைத்து பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் சமீ பத்தில் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.  உதாரணத்திற்கு ஒன்றாம் வகுப்பு மாணவ ருக்கு அரசு செலுத்தவேண்டிய கல்வி கட்டணச் செலவு ரூ.25 ஆயிரத்து 385ல் இருந்து ரூ.11 ஆயிரத்து 719ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2 முதல் 5ஆம்வகுப்பு வரை இப்படி கட்டண செலவு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளிகள், கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட குழந்தைகளிடம் கூடுதலாக பணம் கேட்டு தொந்தரவு செய்கின்றன.

அப்படி செலுத்தாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட குழந்தைக ளை பள்ளிக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர்.  திருப்பூரில் கொங்கு வேளாளர் மேல்நிலைப் பள்ளியில் அவர்கள் கேட்ட கட்டணத்தை செலுத்தவில்லை என்ற காரணத்திற்காக ஒரு மாணவரை வாயிற் கதவுக்கு வெளியே உட்கார வைத்தனர். அந்த மாணவன் பள்ளி புத்தகப் பையுடன் மதிய நேரத்தில் அங்கே அமர்ந்து சாப்பிடும் காட்சியும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. திருப்பூரில் மட்டுமல்ல மாநிலம் முழுவதும் பல இடங்களில் இதுபோன்ற நிலையை காணமுடியும். எனவே பழைய கட்டண செலவை அரசு மீண்டும்செலுத்துவதோடு மாண வர்களிடம் எந்த வித கூடுதல் கட்டணமும் வசூலிக்காமல் தொடர்ந்து கல்வி பயில உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இந்த சட்டம் முறையாக அமலாவதை கண்கா ணிக்கவேண்டிய அதிகாரிகள் அடிக்கடி பள்ளி களில் ஆய்வு நடத்த வேண்டும். அந்த சட்டத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல் தனியார் பள்ளி களுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதில் அதிகாரிகள் நேர்மையான முறையில் நடந்து கொள்வதை உறுதிப்படுத்தவேண்டும்.

;