tamilnadu

img

மதச்சார்பற்ற ஜனதாதள தலைவர் க.ஜான்மோசஸ் காலமானார்

மதுரை:
மதுரை மக்களால் கரிமேடு காமராஜர் என்றழைக்கப்பட்டவரும் மதச் சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளருமான க.ஜான்மோசஸ், உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை அதிகாலை மதுரையில்காலமானார். அவருக்கு வயது 72.

மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்தஅவருக்கு மனைவி, மூன்று மகன்கள்உள்ளனர். அரசியல், பொதுப்பணி, இலக்கியம் எனப் பல தளங்களில் பணியாற்றியவர். பாரதி தேசியப் பேரவை என்ற அமைப்பின் மூலம் இலக்கியப் பணிகளையும், அறப்பணிகளையும் அவர் மேற்கொண்டு வந்தார்.சாதாரண ஏழை எளிய மக்களுக் காகவும், உள்ளூர் பிரச்னைகள் முதல்சர்வதேச பிரச்னைகள் வரை மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்.  மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமைக்காக குரல் கொடுத்தவர். மதுரை மக்களால் கரிமேடு காமராஜர் என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டவர் ஜான் மோசஸ்.

மதுரை நகரில் மக்கள் நலன்சார்ந்த போராட்டம் எங்கு நடைபெற்றாலும்  அங்கு ஜான்மோசஸை காணமுடியும். அழைப்பே இல்லாவிட்டாலும் போராட்டத்தில் பங்கேற்று தனது கனீர்குரலால் தமது கருத்தை பதிவு செவ் வார். குறிப்பாக மதச்சார்பின்மை, மக்கள் ஒற்றுமையை காப்பதில் முக்கியப்பங்காற்றினார். குறிப்பாக மோடிஅரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மதுரையில் நடைபெற்ற அத்தனை போராட்டங்களிலும் பங்கேற் றுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன் இரங்கல்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ஜான்மோசஸ் என்னுடைய நெடுநாளைய நண்பர்.1972 ஆம் ஆண்டு மதுரைக்கு தோழர் பி.ராமமூர்த்தி அவர்களுக்கு தேர்தல் பணியாற்ற நான் வந்தகாலத்தில் இருந்து அவரை அறிவேன்.மதச்சார்பின்மையில் அழுத்தமான பிடிப்பு கொண்ட அவருடயை மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அஞ்சலி
க.ஜான்மோசஸ் மறைவுச் செய்தியறிந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் சி. ராமகிருஷ்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் அ.ரமேஷ், வை.ஸ்டாலின் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 

;