tamilnadu

img

ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை வெளியிடுக.... நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி,சு.வெங்கடேசன் வலியுறுத்தல்

மதுரை:
ஆதிச்சநல்லூரில் 2004 ஆம் ஆண்டு மத்திய தொல்லியல்துறையின் சார்பில் அகழாய்வு செய்த சத்தியமூர்த்தியின் அறிக்கையை மத்திய அரசு இன்னும் வெளியிடாமல் உள்ளது. அவரது அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர்  வலியுறுத்தியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை ஆகிய பகுதிகளில் நடைபெற்றுவரும் அகழாய்வு பணிகளை தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.எஸ். அர்ஜுனன் ஆகியோர்செப்டம்பர் 29 அன்றுபார்வையிட்ட னர்.

தமிழகத்தில் தொடர்ந்து அகழாய்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தமிழக வரலாற்றின் தொன்மையை உலகறியச் செய்யும் பணிக்கு தொடர்ந்து முக்கியத்துவம் தரவும் இது சார்ந்து மத்திய, மாநில அரசுகளிடம்  கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்பதை இருவரும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. கூறியதாவது: இந்தியாவிலே முதன் முதலில்அகழாய்வு நடந்த இடம் ஆதிச்சநல்லூர். 100 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இப்பொழுது தமிழக அரசுமிக விரிவாக  இந்த அகழாய்வினை செய்திருக்கிறது. மத்திய அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்கிற 116 ஏக்கர் மேட்டுப் பகுதியில் இந்த ஆண்டு அகழாய்வு செய்ய மத்திய அரசு அனுமதிக்காததால் அந்த பகுதியை விட்டு வெளிப்புறமாக அகழ்வாய்வு நடந்திருக்கிறது. அடுத்த ஆண்டு மத்திய அரசு நிச்சயம் அதை அனுமதிக்கும். அனுமதிப்பதற்கான கோரிக்கையை நாங்களும் வலியுறுத்து வோம்.அதேபோல முதல் முறையாகஆதிச்சநல்லூர் அகழாய்வில் வாழ்விட பகுதியை கண்டறிவதற்கான முயற்சி நடந்திருக்கிறது. அதில் இரண்டு விஷயங்கள் இப்போது நமக்கு கிடைத்திருக்கிறது.

ஒன்று தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மூன்று பானை ஓடுகள் நமக்கு கிடைத்திருக்கிறது, மற்றொன்று வாழ்விட பகுதிக்கான பிற அடையாளங்களும் குழாய் வடிவ வடிகால்களும் ஆதிச்சநல்லூரில் முதல் முறையாக இப்போது  கிடைத்திருக்கிறது.ஏற்கனவே 2004 ஆம் ஆண்டுமத்திய தொல்லியல் துறையின் சார்பில் அகழாய்வு செய்த சத்தியமூர்த்தி அவருடைய அறிக்கையை மத்திய அரசு இன்னும் வெளியிடாமல் இருக்கிறது. அந்த அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அந்த அறிக்கையின்படி கிமுஒன்பதாம் நூற்றாண்டு என்று அவருடைய ஆய்வு தெரிவிக்கின்றது. இப்பொழுது கார்பன் துகள்கள்உள்ளிட்டவைகள் கால ஆய்வுக்காகமாநில அரசால் அனுப்பப்பட்டு இருப்பதால் விரைவில் அதனுடைய முடிவுகள் வரும்.சுமார் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இந்த தமிழ் நாகரிகத்தின் மிக பழமையான தொன்மையான இடமான ஆதிச்சநல்லூரினுடைய முழுமையான வரலாறும் வெளி யுலகிற்கு கொண்டுவர வேண்டியது நம்முடைய காலத்தின் மிகப்பெரியதேவை.இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி.தெரிவித்தார்.

;