tamilnadu

img

காமராசர் பல்கலை.யில் பட்டியலின ஊழியர்களுக்கு பணி மூப்பு, ஊதிய உயர்வு வழங்க மறுப்பு.... தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் புகார்

மதுரை:
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் எஸ்.சி.  பிரிவு  ஊழியர்களுக்கு பணி மூப்பு, ஊதிய உயர்வு வழங்க மறுப்பதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எழுத்தராகப் பணிபுரியும்   வெள்ளைக்கண்ணு என்பவர், பல்கலைக்கழகத்தில்  தகுதி இல்லாத நபர்களுக்குபணி மூப்பை போலியாக உருவாக்கி பதவி உயர்வு அளிக்கப்படுவதாகவும், முறையான தகுதியுடன் 35 ஆண்டுகள் பணிபுரிந்த தமக்கு பணி மூப்பு, ஊதிய உயர்வு போன்றவற்றை வழங்க மறுப்பதாகவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில்  புகார் அளித்திருந்தார். புகாருக்கு பதிலளிக்கும்படி, பல்கலைக்கழகத்திற்கு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பல்கலைக்கழக அதிகாரிகளிடம் கேட்டபோது,  கொரோனா பொதுமுடக்கம் அமலில் இருந்ததால்கடந்த ஆறு மாதங்களாக ஊழியர்களுக்கு பணிமூப்பு  வழங்கப்படவில்லை. இதனால்  பல்கலைக்கழக ஊழியர் வெள்ளைக்கண்ணு உள்ளிட்டஇருவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், ஆளுநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இதையடுத்து இருவரின் கோரிக்கையையும் பரிசீலிக்கும்படி ஆளுநர் அலுலகத்தில் இருந்து பல்கலைக்கழகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றுதெரிவித்தனர்.

;