tamilnadu

img

மதுரை தத்தனேரி மின்மயானத்தில் உடைந்து போன புகைக்கூண்டு

மதுரை:
மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டி கீழ் தத்தனேரி மின் மயானம் செயல்பட்டு வருகிறது. தினசரி 30-க்கும் மேற்பட்ட உடல்கள் எரிக்கப்படுகின்றன.  ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டுவரும் மின்மயானத்தில்  ஐந்து பணியாளர்கள் பணியாற்றி வருகின்றன.

கொரோனா காலம் என்பதால் இயற்கை,விபத்து மரணங்கள் எண்ணிக்கை வெகுவாகக்குறைந்துவிட்டது. கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது தற்போது தினசரி பத்து உடல்கள் வரை எரியூட்டப்படுகிறது. இங்குள்ள
புகைக் கூண்டு உடைந்துவிட்டதால் சுற்றுப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சுவாசப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.இதுகுறித்து தத்தனேரி மின்மயானம் அருகில் உள்ள கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த விஜி
என்பவர் கூறுகையில், “கடந்த இரண்டு தினங்களாக இங்கு அதிக அளவில் உடல் எரியூட்டப்படுகிறது. அதிகளவில் புகை வெளியேறி  துர்நாற்றம்வீசுகிறது. மக்கள் மயக்கம், சுவாசக்கோளாறு, சிறுகுழந்தைகள் வயிற்றுப்போக்கால் பாதிக்கப் படுகின்றனர் என்றார்.  வீரம்மாள் என்பவர் கூறுகையில் (திங்கள்) காலை 7. 30 மணிக்கு உடல் ஒன்று எரியூட்டப்பட்டது. அங்குள்ள புகைபோக்கி பழுதடைந்து பலநாட்களுக்கு மேல் ஆகி விட்டது அதை சீரமைக்காததால் பகுதி முழுவதும் ஒரே துர்நாற்றம்  துர்நாற்றம்  உடல்கள் எரிக்கப்படும் சுமார் ஒருமணிநேரம் வரை இருக்குமென்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர் பன்னீர்செல்வம் கூறுகையில் “மின்மயானத்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாக புகைக்கூண்டு பழுதடைந்து கீழே விழுந்துவிட்டது. இதுவரை சீரமைக்கவில்லை. இதனால் கணேசபுரம், கைலாசபுரம், பாக்கியநாதபுரம் பகுதி மக்கள்கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.  மாநகராட்சிஅதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கை இல்லை என்றார். செல்லூர்பகுதிக் குழு செயலாளர் ஜா. நரசிம்மன் கூறுகையில், “ஏற்கனவே  புகைக் கூண்டுஒரு வாரத்திற்குள் மாற்றப்படுமென அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மற்றொரு மின்மயானம்  அருகிலேயே உள்ளது. ஆனால், இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. மயானம்  விரிவாக்கப்பட்டு சுமார் ரூ.4 கோடியே 2 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டும் செயல்படாமல் சிதிலமடைந்து வருகிறது.  உடைந்துபோன புகைக் கூண்டை  40 அடி உயரத்திற்கு அமைக்க வேண்டுமென்றார்.

;