tamilnadu

“கணினி, மின்னனுவியல் உற்பத்தியில் தமிழகம் இரண்டாம் இடம்”

மதுரை:
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் உயர் தொழில்நுட்ப மின்னணுவியல் வளர்ச்சியை மையமாக கொண்ட மாநாட்டடின் ஒரு பகுதியாக மின்னணுத்துறையின் மதிப்புகூட்டு அளவினை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சி மற்றும்அபிவிருத்தி திட்டங்களை மேற் கொள்வது குறித்த கூட்டத்தில் தமிழக மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காணொளி காட்சி வழியாக உரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:- நாட்டின் மொத்த மின்னணு உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 16 சதவீதம். கணினி, மின்னணுவியல், ஒலியியல் பொருட்கள் உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.  தமிழகத்தின் மின்னணுவியல் உற்பத்தி 2025-ஆம்ஆண்டிற்குள் 100 மில்லியன்அமெரிக்க டாலராக உயர்த்தஇலக்கு நிர்ணயிக்கப்பட்டுள் ளது.  நாட்டின் மொத்த மின்னணுவியல் ஏற்றுமதியில் தமிழகத்தின்பங்களிப்பை 25 சதவிகிதமாக உயர்த்துவதுடன் செமிகண்டக் டர் புனையமப்புத்துறையை தமிழகத்தில் வளர்க்கவும் இந்தக்கொள்கை வழிவகுக்குமென் றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்டஆட்சித்தலைவர் டி.ஜி.வினய்,சட்டமன்ற உறுப்பினர்கள் கே.மாணிக்கம், பி.பெரியபுள்ளான் (எ) செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் பி.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;