tamilnadu

img

தீபாவளி போனஸ், கொரோனா நிவாரணத் தொகை தருக... மதுரை மாநகராட்சியில் சிஐடியு, எல்பிஎப் காத்திருப்புப் போராட்டம்

மதுரை:
மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் 700 - க்கும் மேற்பட்ட தினக்கூலிதூய்மைப் பணியாளர்கள் மற்றும் 360 - க்கும் மேற்பட்டஇணைக்கப்பட்ட கிராமப்பஞ்சா யத்து தொகுப்பூதிய தூய்மைப் பணியாளர்களுக்கு நிர்வாகத்தின் மூலமாக நேரடியாகவும் , 1700 - க்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொறியியல் பிரிவின் கீழ் பணியாற்றி வரும்பாதாளச்சாக்கடை , தெருவிளக்கு, குடிநீர் , பம்ப்பிங் ஸ்டேசன் , டிரைவர், பார்க் மஸ்தூர் , வாட்ச்மேன் மற்றும் கம்ப்யூட்டர் பிரிவு உள்ளிட்ட1000 - க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்களுக்கு நடப்பு 2020 - ம் ஆண்டிற்கான போனஸ் தொகையினை மாநகராட்சி சிறப்பு ஒப்பந்த விதிகளின் படி தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக வழங்கிட வேண்டும். 

தமிழக அரசும் - மாநகராட்சி நிர்வாகமும் வாரிசு வேலைக்கு விண்ணப்பித்துள்ள தூய்மைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக வேலை வழங்கிட வேண்டும்.   7ஆவது ஊதியக்குழு பரிந்துரையின்படி 26 மாத நிலுவைத் தொகையை வழங்கிட உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.   தினக்கூலி மற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர் களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையான ரூ .20 ஆயிரத்தை  தீபாவளிக்கு முன்பாக வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  மதுரை மாநகராட்சி சிஐடியு - எல்பிஎப் தொழிற்சங்கங்கள் சார்பில் அறிஞர் அண்ணா மாளிகை முன் புதனன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்துக்கு சிஐடியு  மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ். விஜயன் தலைமைவகித்தார். மதுரை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர்  தங்கவேல் முன்னிலை வகித்தார். சிஐடியுமாவட்டச் செயலாளர் இரா. தெய்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர் இரா. லெனின், திமுக  பொதுக்குழு உறுப்பினர்  வி. வேலுச்சாமி, தொமுச பொதுச் செயலாளர் வி. அல்போன்ஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சிஐடியு மாநகராட்சி தொழிலாளர் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ம. பாலசுப்பிரமணியம், மாநகராட்சி  துப்புரவு தொழிலாளர்கள்  முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் எஸ். முருகையா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். போராட்டத்தில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள்  கலந்துகொண்டனர். 

;