tamilnadu

img

பணி ஒதுக்கீடு குளறுபடியால்  வாக்கு எண்ணிக்கை தாமதம்

மதுரை:
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் 27மாவட்டங்களில் மட்டும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றன. ஜனவரி 2 அன்று 315 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.  ஒரு சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை தாமதமானது. தேர்தல் அலுவலர்கள் பணி ஒதுக்கீட்டில் குளறு படியால் புதுக்கோட்டையில் வாக்கு எண்ணிக்கை தாமத மானது.  மதுரையில் தேர்தல்அலுவலர்கள், முகவர்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு வராததால்  வாக்கு எண்ணிக்கையில் தாமதம் ஏற்பட்டது. அதிகாரிகள் குளறுபடியால் ஆரணி ஒன்றியத்தில் தாமதமானது. செய்யாறு தபால் வாக்குபெட்டியின் சாவி இல்லாத தால் தாம‌தமானது. கும்மிடிப்பூண்டியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறையை திறக்க முடியாத‌தால் வாக்கு எண்ணிக்கை தாம‌தம் ஆனது.

திருநங்கை வெற்றி
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திருநங்கை ஒருவர் வெற்றிபெற்றுள்ளார்.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு 2-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலராக திமுக வேட்பாளர் திருநங்கை ரியா வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு திமுக எம்.பி., கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

;