tamilnadu

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாமல் காவல்துறை மெத்தனம்.. நாகர்கோவில் தினேசுக்கு ஜாமீன்

மதுரை:
இளம் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவ விட்டதுதொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நாகர்கோவிலைச் சேர்ந்த காசியின்  நண்பன் தினேஷுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

\தினேஷ் தம்மை ஜாமீனில் விடுவிக்க  வேண்டுமென கோரி தாக்கல் செய்த மனுநீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞர் தினேஷுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 90 நாட்களை கடந்து விட்ட சூழ்நிலையில் தனிப்பிரிவு காவல்துறை  விசாரணை அதிகாரி குற்றப்பத்திரிக்கை இதுவரையும் தாக்கல் செய்யவில்லை. எனவே மனுதாரருக்கு ஜாமீன்வழங்க வேண்டும் என வாதிட்டார்.

நீதிமன்றம் கேள்வி
இரு தரப்பு வாதத்தையும் பதிவு செய்தநீதிபதி இந்த வழக்கை விசாரணை செய்துவரும் சிபிசிஐடி காவல்துறையினர்  வழக்கின் தீவிரத் தன்மையை புரிந்து கொள்ளாமல் செயல்பட்டு வருகின்றனர். பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணை மிகவும் மந்தமாக நடந்து வருகிறது. வழக்குப் பதிவு செய்து90 நாட்கள் கடந்துள்ள சூழ்நிலையில் விசாரணையை  ஏன் சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. குறைந்த பட்சம் இடைக்கால அறிக்கையாவது தாக்கல் செய்திருக்கலாம் என்றார். தினேஷ் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் ஆகிவிட்டதால் அவருக்கு ஜாமீன் வழங்கினார்.இதுபோன்று வழக்கில் காலதாமதம் செய்துஇருந்தால் அனைத்து குற்றவாளிகளும் ஜாமீன்பெற்று தப்பித்து விடுவார்கள் எனக்கூறிய நீதிபதி வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளர் வழக்கின்விசாரணை விவரங்களை நேரில் ஆஜராகிவிளக்கம் அளிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

;