tamilnadu

img

தீக்கதிர் தென்மண்டலச் செய்திகள்...

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போராட்டம் நடத்த முடிவு 

தூத்துக்குடி:

கடந்த 2018-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானபோராட்டத்தில் துப்பாக்கி சூட்டிற்கு பலியானவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களின் உறவினர்கள் செய்தியாளர்களி
டம் கூறியதாவது:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்குஎதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூட் டில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில் பலியானோர்களின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலைவழங்கப்பட்டுள்ளது. இதில் அவர்களது கல்வித் தகுதி அடிப்படையில் வேலை வழங்காமல், கண்துடைப்பாக மிகக் குறைந்த ஊதியம் பெறும் கடைநிலை ஊழியர் பணி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை தமிழகமுதல்வர், அமைச்சர்கள், ஆட்சியர்களிடம் மனு கொடுத்தும், கல்வித் தகுதிஅடிப்படையில் வேலை வழங்கவில்லை.மேலும் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் நினைவாக நினைவகம் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளோம். இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி தமிழக முதல்வர் தூத்துக்குடிக்கு வரும் நேரத்தில் மனு கொடுக்க உள்ளோம். அவர் எங்களை சந்திக்க மறுத்தால், தூத்துக்குடி மக்களைத் திரட்டி அறவழிப் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

                       ******************

முதல்வரின் தூத்துக்குடி பயணம் திடீர் ரத்து

தூத்துக்குடி:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரும் 22-ஆம் தேதி தூத்துக்குடிக்குவருகை தர இருந்தார். இந்நிலையில் தமிழக முதல்வர் அதே தினத்தன்று காலை 11 மணிக்கு பிரதமருடன் காணொலி காட்சி மூலம் கலந்தாய்வு நடந்த இருப்பதால் அவரது தூத்துக்குடி மாவட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வரின் நிகழ்ச்சி நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

                       ******************

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்ப்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்கள் அரசின் கல்வி உதவித்தொகை பெற தாங்கள் படிக்கும் கல்லூரிகளில் விண் ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து உரியசான்றுகளுடன் சமர்ப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலப் பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

;