tamilnadu

img

பொது ஊரடங்கு குறித்து காணொளி காட்சி வெளியீடு

நாகர்கோவில்:
குமரி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக நடைபெற உள்ள பொது ஊரடங்குகுறித்து காணொளி காட்சி வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது, குமரிமாவட்டத்தில் இதுவரை கோவிட் 19 பாதிப்புயாருக்கும் ஏற்படவில்லை. எனினும் நமதுஅருகாமையில் உள்ள கேரளாவில் அதிகம்பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நாம் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகும். தமிழக அரசின் உத்தரவுப்படி செவ்வாயன்று  மாலை 6மணி முதல் வரும் 31 ஆம் தேதி வரை பொதுஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருகிறது. இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்நாட்களில் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே வரவேண்டாம். வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

கடந்த 22ஆம் தேதி நடந்த மக்கள் ஊரடங்கு அன்று நான் பல இடங்களுக்கு சென்றுபார்த்தேன். அப்பொழுது அரசு ஏதோ ஒருநாள் விடுமுறை விட்டுள்ளார்கள், அந்த நாம் கொண்டாடலாம் என்ற எண்ணத்தில் பலர் கார்களிலும், இரு சக்கர வாகனங்களிலும் சுற்றுலா செல்வதை காண முடிந்தது.இது மிகவும் தவறானதாகும். இதுபோன்று வரும் நாட்களில் நடைபெறவுள்ள பொது ஊரடங்கு நாட்களில் விடுமுறை என்றுநினைத்து யாராவது பொது இடங்களில் கூடினாலோ அல்லது சுற்றுலா சென்றாலோ அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெளிவாக தெரிவித்து கொள்கிறேன்.

கோவிட் 19 நோய் உங்களுக்கு இருப்பதுஉங்களுக்கே தெரியாது. உங்களிடமிருந்து மற்றவருக்கு மிக எளிதாக பரவிவிடும். எனவே இந்த பொது ஊரடங்கு நாட்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்.நீங்களும் பாதுகாப்பாக இருங்கள் மற்றவர்களையும் பாதுகாப்பாக இருக்க விடுங்கள்என அவர் அந்த காணொளி காட்சியில் கூறியுள்ளார்.

;