tamilnadu

img

தேவாரம் அருகே வனப்பகுதி வழியாக கேரளம் செல்ல முயன்ற 2 பேர் யானையிடம் சிக்கி காயம்

தேனி:
தேவாரம் அருகே, வனத்துறை எச்சரிக்கையை மீறி வனப்பகுதி வழியாக கேரளத்துக்கு செல்ல முயன்ற 2 பேர்ஒற்றை காட்டு யானையிடம் சிக்கி லேசான காயத்துடன் தப்பினர்.

தேவாரம், சாக்குலூத்து மெட்டுவனப்பகுதிகளில் ஒற்றை காட்டு யானை சுற்றித் திரிந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் மனித உயிர்களை பலிவாங்க அலையும் இந்த ஒற்றை காட்டுயானையிடம் சிக்கி இதுவரை 10-க்கும் மேற் பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த ஆண்டும் ஒற்றை காட்டு யானை தேவாரம், சாக்குலூத்துமெட்டு மலையடிவார பகுதிகளில் சுற்றித் திரிந்து வருகிறது. இதனால் இரவு நேரங்களில் யாரும் தோட்டங்களுக்கோ, வனப் பகுதிக்கோ செல்ல வேண்டாம் என
வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.இந்நிலையில் செவ்வாய்கிழமைஇரவு தேவாரம் அருகே டி.மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த முனியாண்டி(55) என்பவர் கேரள மாநிலம் ஏலத்தோட்டத்திற்கு செல்ல திட்டமிட்டிருந் தார். தமிழகத்திலிருந்து கேரளத்துக்கு இ-பாஸ் பெற்றால் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில் முனியாண்டி சாக்குலூத்துமெட்டு ஒற்றையடி வனப்பாதை வழியாக செல்ல திட்டமிட்டு, இவருடன் ஆண்டிபட்டி அருகேவருசநாடு பொன்னன்படுகை கிராமத்தை சேர்ந்த ராஜாங்கம் என்பவரையும் அழைத்துக்கொண்டு சென்றார்.

அப்போது கேரள எல்லையில் ஐயப்பன் கோவில் அருகே இருவரையும் ஒற்றை காட்டு யானை வழி மறித் தது. இதில் ராஜாங்கம் ஏற்கனவே வனவிலங்குகளை கையாள்வதில் தேர்ச்சிபெற்றவர் என்பதால் ஒற்றை காட்டுயானையிடமிருந்து புதரில் குதித்துதப்பினார். இதேபோல் முனியாண்டியும் காட்டுப்பாதை வழியாக ஓடி தப்பினார். இதில் இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.இருவரையும் கேரள வனத்துறையினர் மீட்டு போடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து இருவரும் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் வீட்டுக்குஅனுப்பி வைக்கப்பட்டனர்.

;