tamilnadu

img

நீட் தேர்வால் தருமபுரி மாணவர் தற்கொலை.... அரசு மருத்துவமனை முன்பு வாலிபர், மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

தருமபுரி:
மருத்துவப்படிப்புச் சேர்க்கைக்கான நீட்நுழைவுத்தேர்வு கொடுத்த மன அழுத்தாத்தால் மேலும் ஒரு மாணவர் தருமபுரியில் தற்கொலை செய்துகொண்டார். 

தருமபுரி மாவட்டம், செந்தில் நகர் செவத்த கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர், சேலம் மாவட்டம் பூசாரிபட்டியில் பழைய டிராக்டர் மற்றும்அதற்கான உதிரி பாகங்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவரது மகன்ஆதித்யா (20) கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கான பயிற்சியை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் செப்டம்பர் 12 சனிக்கிழமையன்று மாலை வீட்டில் ஆதித்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஞாயிறன்று தேர்வு நடைபெற இருந்த நிலையில் தேர்வுக்கான பயத்தின்காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டார். இத்தகவலறிந்து வந்த தருமபுரி நகர போலீசார் மாணவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.பெற்றோரின் கையெப்பம் பெறாமலேயே பிரேதப் பரிசோதனை செய்துவிட்டதாக மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி, ஆதித்யாவின் உடலை வாங்கமாட்டோம் என கூறினர். இத்தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஸ்குமார் பெற்றோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து பெற்றோர், மாணவரின் உடலை வாங்கிக்கொண்டனர்.

அமைச்சர் வாக்குறுதி
மாணவன் ஆதித்யாவின் உடலுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும்மாணவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் நிவாரணமும் வழங்கப் படும் என அறிவித்துள்ளார். 

வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் 
ஆதித்யாவின் உடலுக்கு வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ரெஜீஸ்குமார்,தருமபுரி மாவட்டச் செயலாளர் ஆர்.எழில் அரசு, மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இளவரசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். மேலும் நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தருமபுரி அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

;