tamilnadu

img

பாலியல் வன்புணர்வில் பாதிக்கப்பட்ட வடமாநில பெண்ணுக்கு நீதி கேட்டுப் போராட்டம்

தஞ்சாவூர்:
வடமாநில இளம் பெண்ணை வீட்டு வேலைக்கு என கூறி தஞ்சைக்கு அழைத்து வந்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அடித்து சித்ரவதை செய்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், பட்டப்பகலில் செங்கிப்பட்டியில் காரிலிருந்து சாலையில் வீசிச் சென்ற கடத்தல் கும்பல் மீதுகுண்டர் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கடுமையான தண்டனை வழங்கிட வலியுறுத்தி மாதர் சங்கம் சார்பில் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது. 

போராட்டத்திற்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தமிழ்செல்வி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆர்.கலைச்செல்வி, பொருளாளர் இ.வசந்தி, மாநிலக்குழு உறுப்பினர் பி.கலைச் செல்வி, நிர்வாகிகள் எம்.மாலதி, என்.வசந்தா, பி.விஜயாள், கே.மலர்கொடி, டி.வசந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வேண்டும். கடத்தல் கும்பலுக்கு பாதுகாப்பு அளித்து பாலியல் தொழிலை ஊக்கப் படுத்தும் பின்னணியில் உள்ள அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்உள்ளிட்டவை ஆர்ப்பாட்டத் தில் வலியுறுத்தப்பட்டன. 

தொடர்ந்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் என்.வி.கண் ணன், மார்க்சிஸ்ட் கட்சி தஞ்சைமாநகரச் செயலாளர் என்.குருசாமி, பூதலூர் தெற்குசிபிஎம் ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கர், செங்கிப்பட்டியில் வடமாநில இளம்பெண்னை மீட்டு, சிகிச்சைக்கு அனுப்பிவைத்த சிபிஎம் சந்திரபோஸ்,தமிழரசன் ஆகியோர் ஆட்சியர் ம.கோவிந்தராவைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

;