tamilnadu

img

மனுதர்மத்தின் பெயரால் தலித்துகள், பெண்களின் உரிமை மறுக்கப்படுகிறது

தஞ்சாவூர்:
மனுதர்மத்தின் பெயரால் தலித்துகள், பெண்கள் ஒடுக்குமுறைக்கு ஆளாகிறார்கள் என்று சுபாஷினி அலி குறிப்பிட்டார். தஞ்சையில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலமாநாட்டை வாழ்ததி தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி துணைத் தலைவர் சுபாஷினி அலி பேசுகை‌யி‌ல், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மலைவாழ் மக்கள், பெண்களுக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது பாராட்டத்தக்கது. சமூக நீதிப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட தோழர் அசோக்கை நினைவு கூறவிரும்புகிறேன். அவருக்கு செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

கீழவெண்மணியில் 1968-ல் படுகொலை செய்யப்பட்ட நிலமற்ற தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமை, இன்று வரை நீடிக்கிறது. முற்போக்கான மாநிலம் எனச் சொல்லப்படும் தமிழகத்தில் கூட இத்தகையநிலை உள்ளது. தூத்துக்குடி, பொள்ளாச்சி மட்டும் அல்ல. கும்பகோணத்தில் கூட, இருதினங்களுக்கு முன்இறந்தவரின் சடலத்தைக் கொண்டு செல்ல ஆதிக்க சக்திகள் மறுக்கும் நிலை உள்ளது. 73-ஆவது சுதந்திர தினம் கொண்டாடி வரும் போது, விரும்புபவரை திருமணம் செய்யவோ, காதலிக்கவோ, ஏன் பெண்கள் சைக்கிள்ஓட்டவோ கூட அனுமதி இல்லாத நிலை உள்ளது. பாஜக ஆட்சி நடக்கும் இந்த 6ஆண்டுகளில் பெண்கள் தலித்துகள் பழங்குடி மக்களுக்கு எதிரான கொடுமைகள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது உத்தரப் பிரதேசத்தில் நிலப்பிரபுக்கள் அவர்களது குண்டர் படை, காவல் நிலையங்களை எல்லாம் தாண்டி 40 கிலோ மீட்டர் தூரம் சென்றுதலித் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. இதில் 3 பெண்கள் உள்பட பலர் கொல்லப்படுகின்றனர். ஆனால் காவல்துறை எதையும் கண்டு கொள்ளவில்லை. பாஜக ஆர்.எஸ்.எஸ் ஆகியவற்றின் குணாம்சத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி விட்டு,மனு தர்மத்தை கொண்டு வர துடிக்கின்றனர். மனு தர்மம் சமத்துவமின்மையை ஊக்குவிக்கும். பாஜக அரசு அரசியல் சட்டத்தை வெறுமனே பேசிக் கொண்டுமனுதர்மத்தை தூக்கிப் பிடிக்கும் செயலை செய்து வருகிறது.உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி பாஜக ஆதரவுடன் ஆட்சி அமைத்த போது இரண்டு திட்டங்களை கொண்டுவர முயன்றது. ஒன்று, தலித் பழங்குடிமக்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், மற்றொன்று லக்னோவில் தந்தை பெரியாரின் சிலைஅமைப்பது. ஆனால் சிலை அமைப்பதற்கு பாஜக அனுமதிக்கவில்லை. தமிழகத்தில் பாஜக காலூன்ற முயற்சிக்கிறது. தமிழக மக்கள் விருப்பம் என்ன? பாஜக வேண்டுமா அல்லது பெரியார் வேண்டுமா? 

வட இந்தியாவில் சமூக நீதிக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தலித் மக்கள் தெருவில் இறங்கிப்போராடினார்கள். அதே நாளில் 6, 11 வயது சிறுவர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. தலித்துகள், பெண்கள், அவர்களது வீடுகள் தாக்கப்பட்டன. சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மனு தர்மத்தின் பெயரால் பெண்கள், தலித்துகளுக்கு, பழங்குடியினருக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. கல்வி உதவித்தொகை நிறுத்தப்படுகிறது. உயர்கல்வி நிறுவனங்களில் தலித்துகள் அனுமதி மறுக்கப்படுகிறது. அவர்களை இழிவுபடுத்தி தற்கொலை செய்யும் நிலைக்கு ஆளாக்குகின்றனர். கல்வி தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனியாகி விட்டது. சாதி மறுப்பு திருமணத்தை மனுதர்மம் எதிர்க்கிறது. சாதிய ஒடுக்கு முறையை கொண்டு வர வர்ணாசிரமம் முயற்சிக்கிறது. பெண்களை யாரெல்லாம் இழிவுபடுத்துகிறார்களோ அவர்கள் எல்லாமேமனுதர்ம வாதிகள் தான். ஆணவக் கொலைகளை தடுக்கசட்டம் கொண்டு வரச் சொன்னால் அதற்கு மறுக்கிறார்கள். மனுதர்மத்தின்அடிப்படையை சீர்குலைக்கும் என்பதால் அதற்கு அனுமதி மறுக்கிறார்கள். ஆணவப் படுகொலைகளுக்கு எதிரானபோராட்டத்தை, மனு நீதிக்கு எதிரான போராட்டமாக மக்களிடையே கொண்டுசெல்ல வேண்டும். மனுதர்மம் தேவையா அரசியல் சட்டம் தேவையா என்ற விவாதத்தை கொண்டு செல்லவேண்டும். மனுதர்மத்தை அமல்படுத்த நினைத்தால் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும். ஜனநாயக உரிமைகளை, சட்டத்தை பாதுகாக்கும் போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஆறு ஆண்டுகளாக பாரதிய ஜனதா ஆட்சியில் அரசியல் சட்டத்தின் மீது பலமுனைத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. காஷ்மீர் மக்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். சுதந்திர தினத்தன்று கூட வீட்டை விட்டு வெளியே வர முடியாதவாறு,  அம்மக்களுக்கு அரசியல் சட்ட உரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஊரடங்குகாரணமாக விட்டில் ஒடுங்கிக் கிடக்கும் நிலை. இதனை நாம் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தால், நாளைக்கு நமக்கும் இதே கதிதான். எனவே அரசியல் சட்டத்தை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும்.”

;