tamilnadu

img

ஆண்டுக்கணக்கில் டிமிக்கி கொடுத்த பீரோ புல்லிங் கொள்ளையன் கைது

சென்னை:
சென்னையில் கடந்த மூன்றே மாதங்களில் 200 சவரன் நகைகளைக் கொள்ளையடித்த, பீரோ புல்லிங் திருடனை கைது செய்த போலீசார், 177 சவரன் நகைகளை மீட்டுள்ளனர்.கடந்த 2001 முதல் 2007ம் ஆண்டு வரை தாம்பரம், பள்ளிக்கரணை, சேலையூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் புறநகர்ப் பகுதிகளை அச்சுறுத்தி வந்த நபர் பீரோ புல்லிங் கொள்ளையன் நாகமணி. இவர் இரவு நேரங்களில் வீடுகளில் ஜன்னல் வழியாக கம்பி மூலம் பீரோவை இழுத்து அதிலிருக்கும் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து வந்தார்.

இவர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் தேடுவதை அறிந்து தலைமறை வாக இருந்த நாகமணி, கடந்த 3 ஆண்டுகளாக பெங் களூருவில் குடும்பத்துடன் குடிபெயர்ந்தார்.தான் கைவரிசை காட்டிய அதே பகுதிகளில் கடந்த சில மாதங்களாக நாகமணி மீண்டும் தனது கைவரிசையைக் காட்டியுள்ளார். கடந்த மூன்றே மாதங் களில் பரங்கிமலை காவல் மாவட்டத்தில் 200 சவரன் நகைகளை கொள்ளைய டித்துள்ளது தெரியவந்தது.

பீரோ புல்லிங் எனும் தனது பழைய கொள்ளை முறையை கையாண்டதில் எளிதாக அடையாளம் காணப்பட்டு போலீசாரிடம் சிக்கினார். சிசிடிவி கேமராக் காட்சிகள் கூடுதல் ஆதாரமாக நாகமணியை சிக்க வைத்துவிட்டன.கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவதற்காக பெங்களூ ருவில் இருந்து நாகமணி வருவதை அறிந்த சேலையூர் போலீசார், தாம்பரத்தில் சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடம்
இருந்து 117 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.அதன்பின்னர் சேலையூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட 10 வழக்குகள், மடிப்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட 14 வழக்குகள் என நாகமணி மீது 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.அவர் கொள்ளையடித்த 200 சவரன் நகைகளில் 177 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ள னர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாகமணி புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
 

;