tamilnadu

img

உலக கொரோனா பாதிப்பு அட்டவணை... 16-வது இடத்தில் தமிழகம்...

சென்னை 
ஆசியாவின் கொரோனா மையமாக உள்ள இந்தியாவில் தற்போது பரவல் உச்சத்தில் உள்ளது. குறிப்பாக கடந்த 2 நாட்களாக தினசரி பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்து பயணித்து வரும் நிலையில், மொத்த பாதிப்பு 17 லட்சத்தை நெருங்கி வருகிறது. 
மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, குஜராத், தில்லி   ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகம் மின்னல் வேகத்தில் உள்ளது. இதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உலகளவில் போட்டி போடும் அளவிற்கு பாதிப்பை சந்தித்து வருகிறது. 

உலக கொரோனா அட்டவணைப்படி மகாராஷ்டிராவின் மொத்த பாதிப்பை எடுத்துக்கொண்டால் (பாதிப்பு - 4,00,651) அம்மாநிலம் உலகளவில் 8-வது இடத்தை பிடிக்கும். தமிழகம் (பாதிப்பு - 2.39 லட்சம்) 16-வது இடத்தை பிடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

கொரோனா பாதிப்பு  - முதல் 16 நாடுகள்... (மாலை  - 5 மணி நிலவரம்) 

1. அமெரிக்கா  - 46.35 லட்சம் 

2. பிரேசில்  - 26.13 லட்சம் 

3. இந்தியா  - 16.43 லட்சம் 

4. ரஷ்யா  - 8.39 லட்சம் 

5. தென் ஆப்பிரிக்கா  - 4. 82 லட்சம்

6. மெக்ஸிகோ  - 4.16 லட்சம் 

7. பெரு  - 4.07 லட்சம் 

8. சிலி  - 3.53 லட்சம் (மகாராஷ்டிரா  - 4.00 லட்சம்)

9. ஸ்பெயின்  - 3.32 லட்சம் 

10. ஈரான்  - 3.04 லட்சம் 

11. பிரிட்டன்  - 3.02 லட்சம் 

12. கொலம்பியா  - 2.86 லட்சம் 

13. பாகிஸ்தான்  - 2.78 லட்சம் 

14. சவூதி அரேபிய  - 2.74 லட்சம் 

15. இத்தாலி  - 2.47 லட்சம் 

16. வங்கதேசம்  - 2.37 லட்சம் (தமிழ்நாடு  - 2.39 லட்சம்)  

;