tamilnadu

img

விவசாயிகளுக்கு விரோதமான 3 சட்டங்களை திரும்பப்பெறுக... இடதுசாரிக் கட்சிகள் ஆவேசம்

சென்னை:
விவசாயிகளுக்கு விரோதமான வகையில் நாடாளுமன்றத்தில் மத் திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்றுவலியுறுத்தி சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் 300 மையங்களில் இடதுசாரிக் கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும், தேசிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்கமதிப்பீட்டு வரைவு அறிக்கையை கைவிட வேண்டும் . கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில்வேலை நாட்களை அதிகரிக்க வேண் டும். ரயில்வே, நிலக்கரி சுரங்கம் உள்ளிட்ட பொதுத்துறைகளை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும். தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண் டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியகம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்-விடுதலை) ஆகிய இடதுசாரி கட்சிகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

சென்னையில் 16 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவான்மியூரில் சிபிஎம் வேளச்சேரிபகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏழுமலை, சிபிஎம் தென் சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், அனீபா, சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் வீரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிமுக பேசுவது ஒன்று, செய்வது வேறொன்றுஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள 3 சட்ட மசோதாக் களை அதிமுக ஆதரித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நான் ஒரு விவசாயி என்று கூறுவதை மக்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள். அவருடைய உண்மை முகம் அம்பலப்பட்டுள்ளது. அதிமுகபேசுவது ஒன்று, செய்வது வேறொன்று. மும்மொழி கொள்கையை ஏற்கமாட்டோம் என்று வெளியே பேசுவார்கள். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றமாட்டார்கள். நீட் தேர்வு தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கிடப்பில் கிடக்கிறது. அதைப்பற்றி பேச மாட்டார்கள். ஜிஎஸ்டி இழப்பீடு 5 வருடங்களுக்கு வழங்கப்படும் என்ற மத்தியஅரசின் வாக்குறுதி மீறப்படுகிறது. இதனால் தமிழகத்திற்கு வரவேண் டிய நிதி பல ஆயிரம் கோடி நிலுவைஉள்ளது. அதை கண்டித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற மறுக்கிறார்கள். மத்திய அரசாங்கத்திற்கு அடிபணிந்து செயல்படுகிறார் கள்.விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தில் நடைபெற்றமுறைகேடுகளுக்கு காரணமானவர்களை கைது செய்யாமல், ஏமாற்று நாடகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இந்த முறைகேடு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றுவலியுறுத்தினார்.

                                            *********************

நாட்டின் வளர்ச்சியை நாசப்படுத்திய பாஜக அரசு 

இந்தப் போராட்டத்தில் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

இந்தியாவிலேயே அதிகம் தற்கொலைகள் நிகழும் மாநில பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனா தொடர்பாக தவறானபுள்ளி விவரங்களை தந்து தமிழக அரசு ஏமாற்றுகிறது.சுதந்திரத்திற்கு பிறகான 70 ஆண்டு கால வளர்ச்சியை 7 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு பாழ்படுத்திவிட்டது. நாசகரமான, கேவலமான ஆட்சி மத்தியில் உள்ளது. தவறுகளை சுட்டிக்காட்டினால் எதிர்க்கட்சித் தலைவர்களை தேசத்துரோக வழக்கில் சிறையில் அடைக்க கங்கணம்கட்டிக் கொண்டு செயல்படுகிறார்கள். கொரோனாவை விடகொடியவர்களாக ஆட்சியாளர்கள் உள்ளனர்.இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் வகையில் 3 சட்டங்களை நிறைவேற்றியுள்ளனர். இதனை எதிர்த்து பாஜக கூட்டணிகட்சியான சிரோன்மணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சரே ராஜினாமா செய்துள் ளார். ஆனால், அந்த மசோதாக்களுக்கு அதிமுகஆதரித்து வாக்களித்திருப்பது இந்திய விவசாயிகளுக்கு இழைக்கப்பட்டுள்ள மிகப்பெரும் துரோகம்.அந்த 3 சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதற்கு முதல்நாளே, அதற்கு இணையான ஒரு சட்டத்தை தமிழக அரசு சட்டமன்றத்தில் எடப்பாடி அரசு நிறைவேற்றியுள்ளது. பாஜக கொள்கையை அந்தக்கட்சியை விட அதிமுக தீவிரமாக ஆதரிக்கிறது. தமிழகத்தில் நடப்பது அதிமுக ஆட்சியா? அல்லது பாஜகபினாமி ஆட்சியா?இந்த 3 சட்டங்களை எதிர்த்து வருகிற 23, 24 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் இயக்கம்நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள் ளன. தமிழகத்திலும் எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி அவ்வியக்கத்தை நடத்தும்.இவ்வாறு அவர் கூறினார்.

;