tamilnadu

img

50 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுத் தருவோம்: அமைச்சர்

சென்னை
மருத்துவப் படிப்புகளில் மத்திய தொகுப்புக்கு அளிக்கப்படுவதில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை நிச்சயம் பெற்றுத் தருவோம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற்று தருவது குறித்து அரசின் கவனத்தை ஈர்த்து உரையாற்றிய திமுகஉறுப்பினர் தங்கம் தென்னரசு,“மருத்துவப் படிப்புகளுக்காக தமிழகத்திலிருந்து மத்தியத் தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில்  50 சதவீத இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதற்காக குழு ஒன்றும் அமைக்க வேண்டும் என்றும் கூறியது. தமிழகத்தின் சார்பில் பிரதிநிதி அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால், துறையின் செயலாளராக அல்லாமல் வேறொருவரை பிரதிநிதியாக அறிவித்துள்ளீர் கள். மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர்விஜயபாஸ்கர், “தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் சேர்க்கை 2011 வரை 1,945 இடங்களே இருந்தன. அதனை 3,050 இடங்களாக அதிகரித்தது அதிமுக” என்றார்.மத்திய தொகுப்புக்கு தமிழகத்தால் கொடுக்கும் இடங்களில் இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்ற உணர்வு எங்களுக்கும் இருக்கிறது. சுகாதாரத் துறையில் நல்ல அனுபவம் கொண்ட உமாநாத்தை குழுவின் பிரதிநிதியாகப் போட்டுள்ளோம். மற்றபடி எப்போதெல்லாம் கூட் டம் கூட்டப்படுகிறதோ, அப்போது சுகாதாரத் துறை செயலாளர் இருப்பார். பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இடஒதுக் கீட்டை நிச்சயம் பெற்றுத் தருவோம் என்றும் அமைச்சர் கூறினார்.

;