tamilnadu

img

வடசேரி காவல் உதவி ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுக... தமிழக அரசுக்கு விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை:
மக்கள் கோரிக்கைக்காக குரலெழுப்பிய அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும், கன்னியாகுமரி மாவட்டச்செயலாளருமான மலைவிளைபாசியை தாக்கிய வடசேரி காவல்துறை உதவி ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்குழு தமிழக அரசு மற்றும் காவல்துறையை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர், மாநிலப் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கன்னியாகுமரி மாவட்டம் பார்வதிபுரம் அருகே உள்ள கணியாகுளம் ஊராட்சியில் அனந்த நாறு கால்வாயில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 70 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள படித்துறையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்தது தொடர்பாக, அந்தப்பகுதியில் உள்ள ஆதிதிராவிட பொதுமக்கள் திரண்டுநியாயம் கேட்டனர். ஆக்கிரமிப்பு செய்த ரியல் எஸ்டேட்நபரை கைது செய்ய வேண்டுமென கோஷமிட்டனர். அப்போது அங்கு சென்ற மலைவிளைபாசியும் அவருடைய துணைவியார் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் உஷாபாசியும் அந்த பொதுமக்களிடம் விபரங்களை கேட்டறியும் சமயத்தில், வடசேரி காவல்நிலைய உதவி ஆய்வாளர் அனில்குமார் சம்பவங் களை போட்டோ எடுத்த ஒரு இளைஞரை பூட்ஸ் காலால்திடீரென மிதித்து கீழே தள்ளினார். கடுமையாக தாக்கி மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளார். அப்போது
அங்கே நின்றிருந்த மலைவிளைபாசியும், உஷாபாசியும் ‘ஏன் இப்படி செய்கிறீர்கள்’ என தட்டிக் கேட்டுள்ளனர். உடன் மலைவிளைபாசி பக்கம் திரும்பிய உதவிஆய்வாளர் அனில்குமார் தரக்குறைவாக பேசியதுடன், சட்டையைப் பிடித்து தாக்கி வாகனத்தில் ஏற்றியுள்ளார், அத்துமீறி செயல்பட்டுள்ளார். உடன் அங்கிருந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, அவரைவிடுவித்துள்ளார். 

தனிநபர் ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டிய காவல்துறை அதிகாரி பாதிக்கப்பட்ட தலித் மக்களின் மீதே தாக்குதல் தொடுத்ததோடு பொதுமக்கள் 18 பேர்மீதும் மலைவிளைபாசி, உஷாபாசி ஆகிய இருவர் மீதும் வடசேரி காவல் உதவி ஆய்வாளர் பொய் வழக்குப்போட்டுள்ளார்.தமிழ்நாடு காவல்துறையின் சமீபத்திய வன்மங்கள் குறித்து நாடே பேசிக் கொண்டிருக்கும் நிலையில் மேலும் ஒரு அத்துமீறலையும் - அடக்குமுறையையும் வடசேரி காவல்துறை உதவி ஆய்வாளர்
செய்துள்ளார். இதுபோன்ற மனித உரிமை அத்துமீறல்களை தமிழக அரசும் - காவல்துறையும் அனுமதித்திடக்கூடாது. ஆகவே உடனடியாக வடசேரி காவல்உதவி ஆய்வாளர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கையை தமிழக அரசு எடுப்பதுடன், பொதுமக்கள் மீதுபோடப்பட்ட பொய்வழக்கினை வாபஸ்பெற வேண்டும். இதில் எந்தவித காலதாமதத்தையும் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டாம் என்றும் பொதுமக்களையும், பொதுமக்களுக்காக நியாயம் கேட்கக்கூடியதலைவர்களையும் தாக்குவதையும் அனுமதிக்கக் கூடாது என்றும், அவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதைஅரசு உத்தரவாதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;