tamilnadu

img

வேளாண் தொழிலை நசுக்கும் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்: மதிமுக ஆதரவு

சென்னை:
மத்திய அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து ஜூலை 27ஆம் தேதி விவசாயிகள் நடத்தவுள்ள கருப்பு கொடி போராட்டத்தில் பங்கேற்பதாக மதிமுக அறிவித்துள்ளது.இதுகுறித்து  அக்கட்சியின்  பொதுச்செயலாளர் வைகோ  வெளியிட்ட அறிக்கை:

“மத்திய பாஜக அரசு தனது பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து செயல்படாமல், மாநிலங்களை அடக்கி ஆளும் எதேச் சதிகாரத் தன்மையுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சாரச் சட்டத் திருத்தம்-2020 மற்றும் ஜூன் 3, 2020 இல் பிறப்பிக்கப்பட்ட மூன்று அவசரச் சட்டங்களான அத்தியாவசியப் பொருட்கள் சட்டம்-1955 இல் திருத்தம், வேளாண் விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த் தகம் (ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்கல்) அவசரச் சட்டம்-2020, விவசாயிகள் (அதிகாரப்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு) விலை உறுதி வேளாண் சேவைகள் அவசரச் சட்டம்-2020 ஆகியவை விவசாயிகளுக்குப் பெரும் அநீதி இழைக்கும் சட்டங்களாகும்.

விவசாயத்தை அழித்து, வேளாண் தொழிலிலிருந்து விவசாயிகளை வெளியேற்றக்கூடிய வகையில் கொண்டு வரப்பட்டிருக்கும் அவசரச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஜூலை 27 ஆம் நாள் விவசாயிகள், நாடு முழுவதும் வீடுகளில் கருப்புக் கொடிக் கட்டி எதிர்ப்புத் தெரிவிப்பது என்றும், விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் இணைந்து மாவட்டங்களில் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் அகில இந்திய விவசாயிகள் சங் கங்களின் கூட்டமைப்பு பிரகடனம் 
செய்திருக்கிறது.

 மத்திய பாஜக அரசைக் கண் டித்தும், அவசரச் சட்டங்களைத் திருப்பப் பெறக்கோரியும் ஜூலை 27 ஆம் நாள் நடைபெற உள்ள கருப்புக்கொடி ஆர்ப் பாட்டத்திற்கு மதிமுக முழுமையான ஆதரவை அளிக்கிறது. வேளாண் தொழிலைப் பாதுகாக்க மதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும். மாவட் டங்களில் நடைபெறும் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்று அறப்போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”.இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

;