tamilnadu

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் 2021-ல் பயன்பாட்டிற்கு வரும்: முதல்வர்

சென்னை,ஜூன் 27- காஞ்சிபுரம் மாவட்டம், கிழக்கு கடற்கரைச் சாலையி லுள்ள நெம்மேலியில் ரூ.1,259 கோடி மதிப்பீட்டில், நாளொன்றுக்கு 15 கோடி லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலை யம் அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வியாழனன்று(ஜூன்27)அடிக்கல் நாட்டினார். தற்போது அமைக்கப்படும் நெம்மேலி திட்டம், சென்னை மாநகருக் காக செயல்படுத்தப்படும் மூன்றா வது கடல் நீரை குடிநீராக்கும் திட்டமாகும். ஏற்கெனவே மீஞ்சூரில் நாளொன்றுக்கு 10 கோடி லிட்டர் சுத்திகரிப்பு திறன்  கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை முதல் இயங்கி வருகிறது.  இதன் தொடர்ச்சியாக, நெம்மேலியில் நாளொன் றுக்கு 10 கோடி லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு, 2013ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் இயங்கி வருகிறது.  நெம்மேலியில் செயல்படும் கடல்நீரை குடி நீராக்கும் நிலையத்திற்கு அருகில் காலியாக உள்ள  10.50 ஏக்கர் நிலத்தில் கூடுதலாக நாளொன்றுக்கு 15 கோடி  லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலை யம் ஒன்று அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் ஜெயலலிதா கடந்த 2013ஆம் ஆண்டு ஏப்ரலில் அறி வித்தார். இந்த திட்டப் பணிக்குத்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். முகறு என்ற ஜெர்மனி நிதி நிறுவனத்திடமிருந்து கட னுதவியாக ரூ. 700 கோடியும், மீதமுள்ள தொகை மத்திய  அரசின் அம்ரூட் திட்டத்தின் கீழ் மானியமாகவும் பெற்று  செயல்படுத்தப்படும். இந்நிலையம் அமைக்கும் பணி  டிசம்பர் 2021-க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு  வரும் என்றும் சுமார் 9 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என  முதல்வர் அறிவித்தார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்  கள் எஸ்.பி.வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்ட அமைச்சர்  கள் மற்றும் அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். நெம்மேலியில் ஏற்கெனவே செயல்பட்டு வரும், கடல்நீரை  குடிநீராக்கும் நிலையத்தையும் முதலமைச்சர் பார்வை யிட்டார்.

;