tamilnadu

img

வைரஸ் தொற்றை குறைக்க விழிப்புணர்வை அதிகரிக்க கோரிக்கை...

சென்னை:
கொரோனா  தொற்று அதிகம் பரவும் மாநிலமாக மாறிவரும் நிலையில் தமிழகத்திலும் மரண எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்களிடையே அச்சத்தைப் போக்கும் வகையில் அதிக அளவிலான விழிப்புணர்வுப் பிரச்சாரம், அதிக சோதனை நடத்தப்படவேண்டும் என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்குகிறது. சென்னையை விட கோவை, விருதுநகரில் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.  இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிற அதேநேரத்தில் மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகள் குறைவாக உள்ளன.85 லட்சம் மக்கள்தொகை கொண்ட சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மொத்த படுக்கைகள் 6,120. தமிழகம் முழுவதும் உள்ள 25 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 28,466 படுக்கைகள் உள்ளன. கொரோனா சிகிச்சைக்கான வெண்டிலேட்டர் வசதி 1,775 தான் உள்ளன. அதேபோல தனியார் மருத்துவமனை களில் மொத்த படுக்கைகள் 3,410 தான் உள்ளது.இந்த நிலையில் கொரோனாவை எதிர்கொள்ள வேண்டிய நிலை தமிழக அரசுக்கு இருக்கிறது. அதிகமாக பரிசோதனை செய்தால்தான் விரைவாகக் கொரோனாவை ஒழிக்க முடியும்.

பொதுவாக மக்களிடையே கொரோனா தொற்று குறித்து மத்திய - மாநில அரசுகள் ஊடகங்களின் பிரச்சாரம் காரணமாக மக்களிடையே அச்சம், பீதி வாட்டி வதைத்து வருகிறது. கொரோனா தொற்று குணப்படுத்தக் கூடியது, இறப்பு விகிதம் குறைவாகக் கொண்டது என்ற உண்மை நிலையை மக்கள் அறியவில்லை. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் மத்திய - மாநில அரசுகள் முழு தோல்வியடைந்து விட்டன.கொரோனா தொற்று குறித்து பயந்து, சோதனைக்கு மக்கள் தயாராக இல்லாத போக்கிலிருந்து விடுவிப்பதற்கு, தீவிரமான விழிப்புணர்வுப் பிரச் சாரத்தை மத்திய - மாநில அரசுகள் தொண்டு நிறுவனங்கள் மூலமாக தொடங்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய அணுகுமுறையின் மூலமே கொரோனா நோயை ஒழிக்க முடியும்.இவ்வாறு அழகிரி தெரிவித்துள்ளார்.

;