tamilnadu

img

கள நிலவரத்திற்கு ஏற்ப சென்னையில் சலூன் கடைகள் திறக்க அனுமதி

சென்னை:
சென்னையில் கள நிலவரத்திற்கு ஏற்ப சலூன் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும் என்று நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று குறையக் குறைய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் கடந்த 19 ஆம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப் பட்டது.ஆனால், முடிதிருத்து வோரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப் பதால், தமிழகம் முழுவதும் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கக் கோரி முடி திருத்துவோர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இவ்வழக்கில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தார்.இந்நிலையில் இவ்வழக்கு மே 27-ல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய் யப்பட்டது.அதில், சென்னையில் கள நிலவரத்துக்கு ஏற்பவே சலூன் கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.கள நிலவரங்களை ஆய்வு செய்து சலூன் கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 8 ஆம் தேதி நீதிபதி தள்ளி வைத்தார்.

;