tamilnadu

வாக்குப்பதிவு இயந்திர மையங்களில் கட்சி முகவர்கள் தங்கலாம்: தேர்தல் அதிகாரி

சென்னை, ஏப்.22-வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில், அரசியல் கட்சிகளின் முவர்கள், 24 மணி நேரமும் தங்கி, கண்காணிக்கலாம் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்..தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-மதுரை விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி பாலாஜி, மதுரைக்கு சென்று, தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான நடராஜன், பெண் வட்டாட்சியர் சம்பூரணம் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்துவதாக கூறினார். வாக்குப்பதிவு எந்திரங்கள்பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மையங்களில், விரும்பினால், அரசியல் கட்சிகளின் முவர்கள், 24 மணி நேரமும்தங்கலாம். இவ்வாறு, அரசியல் கட்சிகளின் முகவர்கள், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் மையங்களில் தங்கும் நடைமுறை ஏற்கனவே உள்ளது.ஏதாவது குறை இருந்தால் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கலாம். இருந்தாலும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளர்களிடமும் இந்திய தேர்தல்ஆணையத்தின் நடைமுறைப்படி மின்னணு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது. மின்னணு எந்திரங்கள்பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பகுதிகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணித்து வருகிறார்கள்.


மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கான மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை சென்னையிலிருந்து கண்காணிக்க இணைப்பு வசதி இல்லை. 4 தொகுதிகளின் இடைத்தேர்தல் பாதுகாப்புக்காக 13 கம்பெனி துணை ராணுவ படையினர் வர உள்ளனர். 10 வாக்குச்சாவடிகளில் மறுத்தேர்தல் நடத்துவது தொடர்பான தேதியை தேர்தல் ஆணையமே முடிவு செய்து அறிவிக்கும். அ.ம.மு.க நிர்வாகி தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியிருக்கும் புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். பொன்பரப்பி விவகாரம் குறித்து திருமாவளவன் அளித்துள்ள மனு பற்றி, மாவட்ட தேர்தல் அலுவலரிடம் விளக்கம் கேட்கப்படும்.கன்னியாகுமரி தொகுதியில் சில பகுதியில் வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இதுகுறித்து அந்த மாவட்ட ஆட்சியரிடம், எந்தெந்த பகுதிகளில் எத்தனை பேர் பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன? என்பது பற்றி வாக்குச்சாவடி வாரியாக தெரிவிக்க வேண்டும் என்று சிறப்பு அறிக்கை கேட்கப்பட்டு உள்ளது. அதற்கு அவர், சாராட்சியர் தலைமையில் இதுகுறித்து விசாரித்து அறிக்கை அனுப்புவதாக கூறி உள்ளார்.தொடர்ந்து மே 19- ஆம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். 4 சட்டப்பேரவை தொகுதி இடைதேர்தல்களுக் கான மனுதாக்கல் தொடங்கிவிட்டது. தொடர்ந்து அரசியல் கட்சியினர் அளிக்கும் புகார்கள் குறித்து முறையாக விசாரணை நடத்தி தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார். 

;