tamilnadu

img

எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு எதிர்ப்பு: திமுகவுக்கு முகவர்கள் பாராட்டு

சென்னை:
பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி-யின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய பாஜக முடிவு செய்துள்ளதை கண்டித்து திமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்காக எல்.ஐ.சி முகவர்கள் அக்கட்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து எல்.ஐ.சி முகவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ்.ஏ.அப்துல் கலாம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த காலங்களில் இன்சூரன்ஸ் துறையை பாதுகாக்க முன் னாள் முதல்வர் கலைஞர் குரல் கொடுத்ததை நன்றியோடு நினைவு கூறுவதாக தெரிவித்துள்ளார். எல்.ஐ.சியில் இந்தியா முழுவதும் 12லட்சம் முகவர்கள் உள்ளதாகவும் திமுகவின் தீர்மானம் அனைவரின் உள்ளக் கிடக்கையை பிரதிபலிப்பதோடு அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதுமாகும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக குரல் நாடாளுமன்றத்தின் உள்ளேயும் மத்திய அரசின் பங்கு விற்பனை முடிவை மறுபரிசீலனை செய்யவதற்கு வழிவகுக்கும் என்றும் தாம்நம்புவதாகவும் அந்த கடித் தில் கூறப்பட்டுள்ளது.முன்னதாக  மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முகவர்கள் சங்க பொதுச் செயலாளர்  கலாம் மற்றும் மாநிலப் பொருளாளர்  மு.தாமோதரன், சென்னை 2 கோட்டத் தலைவர் நாகலிங்கம் பொதுச் செயலாளர் வெங்கடேசன் பொருளாளர்  கிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

;