tamilnadu

img

சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கூடாது.... ஓய்வுபெற்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் கடிதம்

சென்னை:
நீட் போன்ற மனுநீதி தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது என்று வேதனையுடன் குரல் எழுப்பியுள்ள திரைக் கலைஞரும், சமூக ஆர்வலருமான சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கடிதம் எழுதியிருப்பது, கருத்துச்சுதந்திரத்திற்கு எதிரானது என்று எதிர்ப்பு எழுந்துள்ளது.

சூர்யாவிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள முயற்சிப்பது பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்தை முடக்குவதற்கு சமம் என்று உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், சுதா ராமலிங்கம் உள்ளிட்ட 25 வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், து.அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோரும் கடிதம் எழுதியுள்ளனர்.

;