tamilnadu

img

நீட் தேர்வை ரத்து செய்க.... பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்துக...

சென்னை:
2020 ஆம் ஆண்டிற்கான மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான  நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும். மாணவர் சேர்க்கையை 12 ஆம் வகுப்புமதிப்பெண் அடிப்படையில் நடத்திட வேண்டும் என்று  மத்திய அரசை இந்தியஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:கொரோனா நோயின் தாக்கம் நாடுமுழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால் இந்த ஆண்டுமே மாதம் 03 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நீட் தேர்வு ஜூலை 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள்மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்என்று கோரிக்கை வைத்துள்ளனர். தேர்வை மீண்டும் மீண்டும் ஒத்திவைப்பது தேர்வு எழுதும் மாணவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும்.தமிழகத்தில் கொரோனாவின் காரணமாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். கல்லூரி மாணவர்களின் பருவத்தேர்வுகளை ரத்துசெய்ய வேண்டுமென்று பல்கலைக்கழக மானியக்குழு நியமித்த குழு பரிந்துரைத்துள்ளது. மறுபுறம் கர்நாடக மாநிலத்தில் ஜூன் 25 முதல் ஜூலை 05 வரை பத்தாம்வகுப்பு மாணவர்களுக்கான தேர்வை நடத்தி வருகின்றனர். தேர்வு எழுதியபல்வேறு மாணவர்களுக்கு கொரோனாநோய் பாதித்துள்ளது. இந்நிலையில் தேசிய அளவில் நீட் தேர்வை நடத்துவது மாணவர்களின் உயிரோடு விளையாடுவதாக மாறிவிடும்.ஆகவே, இந்த ஆண்டு நீட் தேர்வைரத்து செய்ய வேண்டும். மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடத்திட வேண்டும்.

;