tamilnadu

img

இ-பாஸ் முறையை ரத்து செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை:
மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25ஆம் தேதி பொது ஊரடங்கை அறிவித்தது. இதனால் மக்கள் போக்குவரத்தை கட்டுப்படுத்த இ-பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டது.

மத்திய அரசின் உத்தரவுப்படி புதுச்சேரியில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில்,தமிழகத்திலும் இ- பாஸ் நடைமுறையே ரத்து செய்ய வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.உலக முதலீட்டாளர் மாநாடு மூலம் பெறப்பட்ட முதலீடு , வேலைவாய்ப்புகள் குறித்து தமிழக அரசு வெள்ள அறிக்கை வெளியிட வேண்டும். தமிழகத்தில் வேலையில்லாத் திட்டாட் 
டம் தேசிய சராசரியை விட இரட் டிப்பாகி இளைஞர்கள் கனவை சிதைத்துவிட்டது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 5,000 அளித்திட அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

விரைவில் அறிவிப்பு...
சமீபத்தில் மத்திய அரசு மாநிலத்திற்குள் செல்லவும், மாநிலத்திற்கு வெளியே செல்லவும் இபாஸ் தேவையில்லை என அறிவித்து இருந்தது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் மாவட்டங்களுக்குள் செல்லவும் மாநிலத்தில் இருந்து வெளியே செல்லவும் இ-பாஸ் கட்டாயம் என்று அறிவித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிக்கலை அனுபவித்து வந்தனர்.இந்த நிலையில், மத்திய அரசு அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கு எழுதிய கடிதத்தில் மாநிலங்களுக்குள் ளும், மாநிலத்திற்கு வெளியே செல்லவும் இபாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தது.மத்திய அரசின் இந்த உத்தரவை ஏற்று புதுச்சேரியில்  இ-பாஸ் முறை ரத்து செய் யப்பட்டுள்ளது.எனவே அடுத்து தமிழகத்திலும் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாகவும் இதற்கான  அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

;