tamilnadu

அஞ்சல் துறை தேர்வில் தமிழை புறக்கணிப்பதா? வாலிபர் சங்கம் கடும் கண்டனம்

சென்னை, ஜூலை 14- அஞ்சல் துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டி ருப்பதற்கு இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் கண்ட னம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சங்கத் தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் விடுத் துள்ள அறிக்கை வருமாறு: மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசாங்கம் தொட ர்ந்து மாநில உரிமை, பிராந்திய மொழிகள் மீது தாக்குதல் தொடுப்பதன் மூலம் இந் தியா, மாநிலங்களின் ஒன்றி யம் என்கிற அரசமைப்பை கேலிக்கூத்தாக மாற்றி வரு கிறது. வேலைவாய்ப்பு குறித்த எட்டாவது அட்டவணைப்படி இந்தி பேசாத 23 மாநிலங் களில் அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்கக் கூடிய மொழியின் அடிப்படை யில் தேர்வுகள் நடத்தப்பட வேண்டுமென ஏற்கனவே வழிகாட்டுதல்கள் இருக்கின் றன. இவற்றை பின்பற்றாமல் மத்திய அரசு தமிழகத்தில் இந்தியை திணிக்க கூடிய மோசமான சூழலை உரு வாக்கியுள்ளது. ஜூலை 14 ஞாயிறன்று தமி ழகம் முழுவதும் இந்திய அஞ் சல் துறையில் அஞ்சலக உத வியாளர் பணிக்கான போட்டி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுகள் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் எழுதப்பட்டு வந்தன. தமிழ கத்தில் அஞ்சல் துறையில் ஏற்கனவே பீகார் உள்ளிட்ட வட மாநிலத்தைச் சேர்ந்த வர்கள் தமிழில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளது குறித்து விசாரணை நடைபெற்று வரு கிறது. தேர்விற்கு மூன்று நாட்க ளுக்கு முன்பாக 11.7.2019 அன்று இத்தகைய அறி விப்பை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.  ஒருபுறம் மக்களின் விருப்பத்திற்கு மாறாக இந்தி மொழியை மத்திய அர சாங்கம் திணிக்காது என்கிற அறிவிப்பை வெளியிட்டு விட்டு, கொல்லைப்புறம் வழி யாக மும்மொழிக் கொள்கை என்ற பெயரிலும், ரயில்வே துறையில் உயர் அதிகாரிகளி டம் ரயில்வே ஊழியர்கள் பேசுகின்ற பொழுது தமிழில் பேசக்கூடாது; ஆங்கிலம் மற்றும் இந்தியில் தான் பேச வேண்டும் என மறைமுக மாக சுற்றறிக்கை, பல்கலைக் கழக மானியக் குழுவின் மூல மாக அனைத்து பல்கலைக் கழகம், கல்லூரிகளுக்கும் இந்தி கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும் என சுற்ற றிக்கையும் சமீபத்தில் அனுப் பப்பட்டுள்ளது.  மாநில அரசு இது போன்ற பிரச்சனையில் தொடர்ந்து மத்திய அரசை எதிர்ப்பதற்கு மாறாக தமிழக மக்களுக்கும் இளைஞர்களுக்கும் துரோ கம் இழைக்கிறது. இதை இந் திய ஜனநாயக வாலிபர் சங் கம் வன்மையாகக் கண்டிக்கி றது இவ்வாறு அவர்கள் கூறி யுள்ளனர்.

;