tamilnadu

img

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை முடக்கம்

சென்னை விமான நிலையத்தில், இணையதள சேவை முடங்கியது. இதனால் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில், இன்று காலை 5 மணி அளவில் ஏற்பட்ட இணைய தள சேவை முடங்கியதால், விமானங்களின் வருகை மற்றும் புறப்படும் நேரம் தெரியாததால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இணையவழி பயணச்சீட்டுகள், விமான நிலைய பரிசோதனை உள்ளிட்ட செயல்பாடுகளும் முடங்கின. 

இந்த விவரங்களை விமான நிலைய அதிகாரிகள் துண்டுச் சீட்டில் எழுதி தருவதால் பயணிகள் சிரமம் அடைந்துள்ளனர். இதன் காரணமாக 20க்கும் மேற்பட்ட விமானங்கள் உரிய நேரத்திற்கு இயக்க முடியாமல் காலதாமதமாக புறப்பட்டு சென்றன.

;